மேலும்

நாள்: 22nd September 2018

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றது.

நாடுகளை இழுக்க சீனாவும் இந்தியாவும் பனிப்போர் – மாலைதீவு முன்னாள் அதிபர்

நாடுகளைத் தமது பக்கத்துக்கு இழுத்துக் கொள்வதற்காக, இந்தியப் பெருங்கடலில் சீனாவும் இந்தியாவும் பனிப்போரில் ஈடுபட்டுள்ளதாக மாலைதீவின் முன்னாள் அதிபர் மொகமட் நசீட் தெரிவித்துள்ளார்.

லெப்.கேணல் எரந்த பீரிசை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரி லெப்.கேணல் எரந்த பீரிஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கில் போராட்டங்கள் தீவிரம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விரைவாக விடுதலை செய்யக் கோரியும், அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வடக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

விலகிச் சென்ற 15 பேர் அணி மீது ‘போர் தொடுக்கும்’ சிறிலங்கா அதிபர்

கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிச் சென்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ‘போர்’ தொடுத்துள்ளார்.

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு நேற்று ஒரு நாளில், 2.03 ரூபா வீழ்ச்சியடைந்து, 170.66 ரூபாவைத் தொட்டுள்ளது.