மேலும்

நாள்: 11th September 2018

மோடியிடம் சம்பந்தனும், டக்ளசும் முன்வைத்த கோரிக்கைகள்

சிறுபான்மையினருக்கு அதிகாரங்களை உடனடியாகப் பகிர்ந்தளிக்கப்படுவதன் அவசியம் உள்ளிட்ட, இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்தும், இந்தியப் பிரதமருடன் நேற்று கலந்துரையாடப்பட்டதாக ஐஎஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாய் கூடத் தின்ன முடியாத முந்திரிப் பருப்பை சிறிலங்கா அதிபருக்கு கொடுத்த சிறிலங்கன் எயர்லைன்ஸ்

நாய் கூடச் சாப்பிட முடியாத முந்திரிப் பருப்புகளை சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் தனக்கு பரிமாறப்பட்டதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விசனம் வெளியிட்டுள்ளார்.

வியட்நாம் சென்றடைந்தார் சிறிலங்கா பிரதமர்

7 ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் ஆசியான் மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வியட்நாமின் தலைநகர் ஹனோயை சென்றடைந்தார்.

பாக்குநீரிணையின் இரு கரைகளும் பாதுகாப்பான எதிர்காலமும் – லோகன் பரமசாமி

தமிழகத்தில்திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக மு.க. ஸ்ராலின் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். முற்றிலும் ஒரு புதிய எதிர்காலத்தை நோக்கி கழகத்தையும் தமிழினத்தையும் அழைத்து செல்வதாக தனது தந்தையார் இறந்ததன் பின்னான முதலாவது பொதுக்குழுக் கூட்டத்தில் ஸ்ராலின் கூறி இருக்கிறார்.

மகிந்தவின் விம்பமாக மாறி வருகிறார் மைத்திரி – சரத் விஜேசூரிய

குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு முன்னிலையாகாமல், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நாட்டை விட்டு வெளியேறியதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும் என்று, பேராசிரியர் சரத் விஜேசூரிய குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறிய பின்னரே சிஐடிக்கு அறிவித்தார் அட்மிரல்

வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் சென்ற பின்னரே,  தனது அதிகாரபூர்வ பயணம் தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

புதுடெல்லியில் கருத்துக் கூற மறுத்த மகிந்த

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்க தமிழ்நாடு அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளமை குறித்து கருத்து வெளியிட, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மறுப்புத் தெரிவித்துள்ளார்.

மெதுவாகச் செயற்படுகிறது சிறிலங்கா – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் குற்றச்சாட்டு

நிலைமாறு கால நீதி நிகழ்ச்சி நிரலை அர்த்தமுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதில் சிறிலங்கா அதிகாரிகள் மிகவும் மெதுவாகவே செயற்படுகின்றனர் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் தெரிவித்துள்ளார்.