மேலும்

ஜெனரல் அமல் கருணாசேகரவுக்குப் பிணை

சிறிலங்காவின் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் வழக்கில், இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

எனினும், இவர் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், தகவல்களை வழங்க மறுப்பதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் கூறியிருந்தனர்.

கடந்த வழக்கு விசாரணையின் போது, கம்பகாவில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினால் பராமரிக்கப்பட்டு வந்த இரகசிய முகாம் பற்றிய தகவல்கள் தமக்குத் தெரரியும் என்று இவர் தனது சட்டவாளர் மூலம் ஒப்புக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் கல்கிசை நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையின் போது, மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை பிணையில் செல்ல நீதிவான் அனுமதி அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *