மேலும்

நாள்: 30th September 2018

2019 இல் 306.1 பில்லியன் ரூபாவை விழுங்குகிறது பாதுகாப்பு செலவினம்

2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்படவுள்ளதாக, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் பதவிக்கு புதிய வேட்பாளர் – சுமந்திரன்

வடக்கு மாகாணசபைக்கான அடுத்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய முதலமைச்சர் வேட்பாளர் ஒருவரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய முன்னணியில் விக்னேஸ்வரன் போட்டி – கொழும்பு வாரஇதழுக்கு செவ்வி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லை என்றால், அடுத்த மாகாணசபைத் தேர்தலில், புதிய அரசியல் முன்னணி ஒன்றின் மூலம் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதுலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

ரிஐடியினருக்கு கொமாண்டோ பயிற்சி அளிக்க கோரினார் நாலக சில்வா

சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்த ஒரு குழுவினருக்கு, கொமாண்டோ பயிற்சி அளிக்குமாறு, அதன் பொறுப்பதிகாரியாக இருந்த பிரதி காவல்துறைமா அதிபர் நாலக சில்வா தம்மிடம் கேட்டார் என்று, சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி லதீப் தெரிவித்துள்ளார்.

இன்று நாடு திரும்பும் சிறிலங்கா அதிபர் – இறுக்கமான முடிவுகளை எடுப்பார்?

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் இன்று அதிகாலை நாடு திரும்பியதும், அடுத்து வரும் வாரங்களில், அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட இறுக்கமான பல அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாங்கள் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை – சிறிலங்கா அதிபருக்கு சரத் பொன்சேகா பதிலடி

போரின் இறுதி இரண்டு வாரங்களில் விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் அச்சத்தினால், சிறிலங்காவின் அரசியல், இராணுவத் தலைமைகள் வெளிநாட்டில் ஓடி ஒளிந்து கொண்டதாக சிறிலங்கா அதிபர் கூறியிருந்த தகவலை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மறுத்துள்ளார்.