மேலும்

நாள்: 19th September 2018

பலாலி விமான நிலைய விவகாரம் – புதுடெல்லி அதிகார மட்டத்தில் குழப்பம்

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணியை சிறிலங்கா விமானப்படையே மேற்கொள்ளும் என்றும், இந்தியாவிடம் கையளிக்கப்படாது என்றும் சிறிலங்கா அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியிருப்பது, புதுடெல்லி அதிகாரிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாலக டி சில்வாவை கட்டாய விடுமுறையில் அனுப்புமாறு சட்டம் ஒழுங்கு அமைச்சர் பரிந்துரை

பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவை, கட்டாய விடுமுறையில் அனுப்புமாறு, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார,  தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

சிறிலங்காவில் எகிறும் அமெரிக்க டொலரின் பெறுமதி – 167.41 ரூபாவாக உயர்வு

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு இன்னும் சரிவைச் சந்தித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் இன்றைய விற்பனைப் பெறுமதி, 167.41 ரூபாவாக, வீழ்ச்சியடைந்தது.

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நாடு திரும்பினார்

சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

நீதி விசாரணைகளில் சிறிலங்கா அதிபர் தலையீடு – அனைத்துலக சமூகத்திடம் முறைப்பாடு

கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நடத்தப்படும் நீதித்துறை விசாரணைகளில் சிறிலங்கா அதிபர் தலையீடு செய்வதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துமாறு கோரியும், ஐ.நா மற்றும் மேற்குலக நாடுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தடைக்கு பயந்து ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது சிறிலங்கா

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகளை அடுத்து, ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை சிறிலங்கா நிறுத்தியுள்ளது.

நொவம்பர் 05ஆம் நாள் வரவுசெலவுத் திட்டம்

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்வரும் நொவம்பர் 05ஆம் நாள் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்கி எதிர் டெனீஸ் – மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடரும் சட்டப் போராட்டம்

உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு ஒத்திவைக்குமாறு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தரப்பு முன்வைத்த கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்தால் கோத்தா பாதுகாப்புக் கோரலாம் – சிறிலங்கா பிரதமர்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்தால், அவருக்கு அரசாங்கம், காவல்துறை பாதுகாப்பு அளிக்கும் என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.