மேலும்

நாள்: 8th September 2018

தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு கோரிக்கை சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டது – சம்பந்தன்

அரசியல் தீர்வு மூலம் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தத் தவறினால், இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லை என்று எச்சரித்துள்ளார்  எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன்.

ரஷ்யாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டது சிறிலங்கா

சிறிலங்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில், இராணுவ ஒத்துழைப்பு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்யரத்ன ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

கனடா போன்ற அதிகாரப் பகிர்வு முறையே சிறிலங்காவுக்கு அவசியம் – சம்பந்தன்

சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பு கனடா போன்ற நாடுகளில் காணப்படும் அதிகாரப்பகிர்வு முறைகளின் அடிப்படையில் அமைய வேண்டும். என்று, சிறிலங்காவுக்கான கனேடியத் தூதுவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பிலும் பௌத்தத்துக்கே முதலிடம், முன்னுரிமை- சிறிலங்கா அரசு

தற்போதைய அரசியலமைப்பில் உள்ளது போன்று புதிய அரசியலமைப்பிலும், பௌத்த மதத்துக்கு முன்னுரிமையும் அதனைப் பாதுகாப்பதற்கான அரசின் கடப்பாடும் உறுதி செய்யப்பட்டிருக்கும் என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கூட்டுப் பயிற்சிக்காக இந்தியாவின் 3 போர்க்கப்பல்கள், 3 விமானங்கள் திருகோணமலை வருகை

சிறிலங்கா கடற்படையுடனான கூட்டுப் பயிற்சிக்காக, இந்தியக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்களும் மூன்று விமானங்களும் நேற்று திருகோணமலையை வந்தடைந்துள்ளன.

விஜயகலாவுக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தொடர சட்டமா அதிபர் அனுமதி

விடுதலைப் புலிகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

நீதிமன்றப் படியேறிய முன்னாள் நீதியரசர் – மீண்டும் முன்னிலையாக உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று முன்னிலையான வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும், அமைச்சர்கள் அனந்தி மற்றும் சிவநேசனையும் மீண்டும் வரும் 18 ஆம் நாள் முன்னிலையாகும்படி நீதியரசர் உத்தரவிட்டார்.

இந்தியாவின் கையில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் – ஏமாந்தது சீனா

இழுபறியில் இருந்து வந்த-  வடக்கு, கிழக்கில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.