மேலும்

நாள்: 7th September 2018

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் – செனட் அங்கீகாரம்

சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக பரிந்துரைக்கப்பட்ட அலய்னா பி ரெப்லிட்ஸ்சின் நியமனத்தை அமெரிக்க செனட் அங்கீகரித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான விக்னேஸ்வரனின் மனு நிராகரிப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக டெனீஸ்வரன் தரப்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்யக் கோரும் மனுவை, சிறிலங்கா உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்திய- சிறிலங்கா கடற்படைகளின் ஆறு நாள் கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் இன்று ஆரம்பம்

இந்திய- சிறிலங்கா கடற்படைகள் இணைந்து நடத்தும் SLINEX-2018 கூட்டு கடற் பயிற்சி திருகோணமலையில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று தொடக்கம் எதிர்வரும் 13 ஆம் நாள் வரை, திருகோணமைலைக் கடற்பரப்பில் இந்தக் கூட்டுப் பயிற்சி நடைபெறவுள்ளது.

ரவி கருணாநாயக்கவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை மீண்டும் அமைச்சராக நியமிக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு முடிவு செய்துள்ளது.

படை அதிகாரிகளை இடைநிறுத்த வேண்டும் – காணாமல் போனோர் பணியகம் பரிந்துரை

ஆட்கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட, படை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளை பணியில் இருந்து இடைநிறுத்த வேண்டும் என்று  காணாமல் போனோருக்கான பணியகம் சிறிலங்கா அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இராஜதந்திரிகளை விட சிறப்பாக பணியாற்றினராம் முன்னாள் படைத் தளபதிகள் – கோத்தா புகழாரம்

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் வெளிநாடுகளில் தூதுவர்களாக ஆற்றிய பணி சிறப்பானதாக இருந்தது என்றும், ஏனையவர்களை விட அவர்கள் திறமையாகச் செயற்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.