மேலும்

அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்

அரசியலை விட்டு வெளியேறி, தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் ஒரு மக்கள் அமைப்புடன் இணைந்து கொள்வதையே தாம் விரும்புவதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு  அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தம்மிடம் நான்கு தெரிவுகள் இருப்பதாகவும், அதில், மக்கள் அமைப்பு  ஒன்றில் இணைந்து கொள்வதே தமக்கு மிகவும் பிடித்தமானது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

கூட்டமைப்பின் கொள்கை விவகாரங்கள் தொடர்பாக இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டிருந்த போதும், அந்தச் சந்திப்பு நடக்கவில்லை.

அவர் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர், சந்திப்பு நடக்கும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

3 கருத்துகள் “அரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன்”

 1. ஈழத்து ஈசன்
  ஈழத்து ஈசன் says:

  அரசியலிலிருந்து விலகவேண்டாம் ஐயா உங்களுகக்கு பிடித்த கட்சியில் சேரவும்

 2. Poologasingham Sivanesan
  Poologasingham Sivanesan says:

  தங்களின் தலைமை ஈழத் தமிழர்கள் ஆகிய எமக்கு அவசியம் தேவை

 3. P Rajamuthiah says:

  மிக்க நன்றி ஐயா. தாங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவக்கு தமிழினம் என்றெ;றும் நன்றி கூறக்கடமைப்பட்டிருக்கிறது.
  இதனால் வட மாகாணசபைக்கு ஆற்றலும் திறமையும் கொண்ட முதல்வர’ கிடைக்க உதவுகிறீர்கள்.
  நீங்கள் முற்றாக அரசியலில் இருந்து ஒதுங்கிஆன்மீக தொண்டு செய்யுங்கள்.
  உங்களிடம் தலைமத்துவ பண்பு குறைபாடாக உள்ளது. எனவே மக்கள் இயக்கத்துக்கு தலைமை தாங்க போய் எஞ்சியுள்ள அற்ப சொற்ப மதிப’பையும்இழந்து விடாதீர்கள்’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *