மேலும்

நாள்: 16th September 2018

தாமதமாகும் சீன பிரதமரின் சிறிலங்கா பயணம்

சீன பிரதமர் லி கெகியாங் இந்த மாதம் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை பிற்போட்டுள்ளார் என்று தெரியவருகிறது. இந்த மாதம் சீன பிரதமர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.

வடக்கு மாகாண வீதிகள் புனரமைப்பு – சீனாவை வெளியேற்றி விட்டு நுழைகிறது இந்தியா

வடக்கில் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்டிருந்த சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தைக் கைவிட்டு விட்டு அதனை இந்திய நிறுவனங்களிடம் வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய நுழைவிசைவு: டக்ளசுக்கு அனுமதி, சிவாஜிலிங்கத்துக்கு மறுப்பு

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு இந்தியா நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவுக்கு ஏவுகணைப் போர்க்கப்பலை வழங்குகிறது சீனா

சீன கடற்படையினால் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைப் போர்க்கப்பல் ஒன்றை சிறிலங்காவுக்கு சீனா வழங்கவுள்ளது. 1993ஆம் ஆண்டு சீனக் கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ‘ரொங்லிங்’ என்ற ஏவுகணைப் போர்க்கப்பலே சிறிலங்கா கடற்படைக்கு வழங்கப்படவுள்ளது. 

வியன்னாவுக்கான சிறிலங்கா தூதுவரை திருப்பி அழைத்தார் சிறிலங்கா அதிபர்

வியன்னாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரியானி விஜேசேகரவையும், அங்குள்ள ஐந்து சிறிலங்கா தூதுரக அதிகாரிகளையும் உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

ராஜிவ் காந்தியை பொறியில் சிக்க வைத்த ஜே.ஆர் – நடந்ததை விபரிக்கிறார் நட்வர் சிங்

சிறிலங்கா அதிபராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வற்புறுத்தலான கோரிக்கையை அடுத்தே, இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி, 1987 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் நாள், இந்தியப் படையினரை சிறிலங்காவுக்கு அனுப்பினார் என்று, அப்போது இந்தியாவின் முன்னாள் அமைச்சர் கே.நட்வர்சிங் தெரிவித்துள்ளார்.