மேலும்

மாதம்: February 2018

பரபரப்பான சூழலில் இன்று நாடு திரும்புகிறார் கோத்தா – கைது செய்யப்படுவாரா?

சிறிலங்காவில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ள சூழலில், அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று நாடு திரும்பவுள்ளார்.

அழைப்பும் மறுப்பும்

தமிழ் மக்களுக்கு சமஷ்டித் தீர்வை பெற்றுத் தர வேண்டும் என்று கொள்கையில் பயணிக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்புக்குப் பின்னடைவு – ஒப்புக்கொள்கிறார் சுமந்திரன்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஒப்புக் கொண்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில் ‘தொங்கு’ சபைகள் – சிறுகட்சிகள், சுயேட்சைகளுக்கு கொண்டாட்டம்

புதிய தேர்தல் முறையினால் வடக்கு, கிழக்கில் தமிழ்ப் பகுதிகளில் உள்ள மூன்று உள்ளூராட்சி சபைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சபைகளிலும், பிற கட்சிகளின் அல்லது சுயேட்சைக் குழுக்களின் ஆதரவுடனேயே ஆட்சியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்றியது ஐதேக

கொழும்பு மாநகரசபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது.  கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் 131,353 வாக்குகளுடன் ஐதேக 60 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறது.

3190 ஆசனங்களுடன் மகிந்த அணி முன்னிலையில்

சிறிலங்காவில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், சுமார் 46 இலட்சம் வாக்குகளைப் பெற்று, மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி முன்னணியில் இருக்கிறது.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் இறுதி முடிவுகள்

வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரு நகர சபை மற்றும்  நான்கு  பிரதேசபைகளுக்காக  நேற்று நடந்த தேர்தலின் அதிகாரபூர்வ முடிவுகள் இன்று காலை தொடக்கம்ட வெளியிடப்பட்டு வருகின்றன.

மன்னார் மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் இறுதி முடிவுகள்

மன்னார் மாவட்டத்தில் உள்ள முசலி, நானாட்டான், மன்னார், மாந்தை மேற்கு பிரதேசபைகள் மற்றும் மன்னார் நகர சபைக்கு  நேற்று நடந்த தேர்தலின் அதிகாரபூர்வ முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் இறுதி முடிவுகள்

நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

மீண்டும் மகிந்த அலை – 42 வீத வாக்குகளுடன் முன்னிலையில்

சிறிலங்காவில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணி சுமார் 42 வீத வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் பொதுஜன முன்னணிக்கு 359 ஆசனங்கள் கிடைத்துள்ளன.