பாதுகாப்புக் கருதியே பிரிகேடியர் பிரியங்கவை திருப்பி அழைத்தேன் – சிறிலங்கா இராணுவத் தளபதி
பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் பாதுகாப்புக் கருதியே, அவரை தாம் பிரித்தானியாவில் இருந்து திருப்பி அழைத்ததாக, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
வவுனியா, கொக்குவெளியில் 56 ஆவது டிவிசனின் புதிய தலைமையக கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“இராணுவத் தளபதி என்ற வகையில், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
அவர் மற்றொரு நாட்டில், அந்த நாட்டின் சட்டத்தொகுதியின் கீழ் கடமையாற்றினார்.
அத்தகைய நிலையில், அவரது பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கப்படும் என்று வேறெந்த நீதிமன்றத்தின் மீதும் இராணுவத் தளபதி என்ற வகையில் நான் நம்பிக்கை வைக்க முடியாது” என்றும் அவர் கூறினார்.