அமெரிக்காவின் பாரிய மருத்துவக் கப்பல் யுஎஸ்என்எஸ் மேர்சி சிறிலங்கா வரவுள்ளது
அமெரிக்க கடற்படையின் பாரிய மருத்துவக் கப்பலான யுஎஸ்என்எஸ் மேர்சி (USNS Mercy) சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் மிகப் பெரிய மனிதாபிமான மற்றும் அனர்த்த மீட்பு தயார் நிலை நடவடிக்கையை அமெரிக்கா இந்த ஆண்டும் முன்னெடுக்கவுள்ளது.
பசுபிக் ஒத்துழைப்பு ஒத்திகை என்ற பெயரிலான அமெரிக்காவின் இந்த நடவடிக்கையின் கீழ் கடந்த ஆண்டு யுஎஸ்எஸ் போல் ரிவர் என்ற கப்பலில் வந்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடற்படையினர் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்திருந்து மனிதாபிமான உதவிப் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த ஆண்டு யுஎஸ்என்எஸ் மேர்சி என்ற மருத்துவக் கப்பல் சிறிலங்காவுக்கு வரவுள்ளது. இந்தக் கப்பல் இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்யவுள்ளது.
இந்த கப்பலில் அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த 800 கடற்படையினர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் சிறிலங்கா வரவுள்ளனர்.