மேலும்

மட்டு. மாநகரசபை, மூதூர் பிரதேச சபைக்கு மிகநீளமான வாக்குச்சீட்டு

ballot-papersசிறிலங்காவில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், மட்டக்களப்பு மாநகரசபைக்கும், மூதூர் பிரதேச சபைக்குமான வாக்குச்சீட்டுகளை மிகவும் நீளமானவையாக அச்சிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

33 உறுப்பினர்களைக் கொண்ட மட்டக்களப்பு மாநகரசபைக்கான தேர்தலில், 11 அரசியல் கட்சிகளும், 5 சுயேட்சைக் குழுக்களுமாக, மொத்தம் 16 அணிகள் போட்டியிடுகின்றன.

21 உறுப்பினர்களைக் கொண்ட மூதூர் பிரதேசசபைக்கான தேர்தலிலில், 14 அரசியல் கட்சிகள் மற்றும் 2 சுயேச்சைக் குழுக்கள் என 16 அணிகள் போட்டியிடுகின்றன.

எனவே, இந்த இரண்டு சபைகளுக்குமான வாக்குச் சீட்டுகளே மிகவும் நீளமானவையாக அச்சிடப்பட்டுள்ளன.

அதேவேளை, பாணந்துறை நகரசபைக்கான வாக்குச்சீட்டுகளே மிகச் சிறியதாக அச்சிடப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *