மேலும்

மாதம்: December 2017

தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை – ரெலோவும் முடிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ, உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளது.

பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டம் இன்றும் தொடரும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான ஆசனப் பங்கீட்டுப் பேச்சுக்கள்  இன்றும் நாளையும் தொடர்ந்து இடம்பெறும் என்று தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலர் துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

248 உள்ளூராட்சி சபைகளுக்கு வரும் 18 ஆம் நாள் வேட்புமனுத்தாக்கல் ஆரம்பம்

248 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு நேற்று மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.

4000 மில்லியன் ரூபாவை விழுங்கும் உள்ளூராட்சித் தேர்தல்

ஒரே நாளில் நடத்த எதிர்பார்த்துள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களுக்கு சுமார் 4000 மில்லியன் ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் கையளிப்பதற்கு சிறப்பு அமைச்சரவைக் கூட்டம்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிப்பது தொடர்பான அரசிதழை அறிவிப்பை அங்கீகரிப்பதற்காக நாளை மறுநாள் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதுடன், நாடாளுமன்றத்திலும் அதற்கு அங்கீகாரம் அளிக்கப்படவுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலுக்கு புதுப்பிரச்சினை – உச்சநீதிமன்றில் மற்றொரு மனு தாக்கல்

வரும் பெப்ரவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், உள்ளூராட்சி சபைகளின்  எல்லைகள் நிர்ணயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் உச்சநீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற பின்னர் அரசியலில் ஈடுபடக் கூடாது – சிறிலங்கா இராணுவத் தளபதி

இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெற்ற பின்னர் எந்தச் சூழ்நிலையிலும் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 17இற்கு முன் உள்ளூராட்சித் தேர்தல் – மகிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சித் தேர்தல்கள் வரும் பெப்ரவரி 17ஆம் நாள் அல்லது அதற்கு முன்னதாக நடத்தப்படும் என்று சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் தத்தளித்த 5 சிறிலங்கா மீனவர்களை மீட்டது ஈரானிய எண்ணெய் கப்பல்

படகு கவிழ்ந்த நிலையில் இந்தியப் பெருங்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறிலங்கா மீனவர்கள் ஐந்து பேரை ஈரானிய எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்று காப்பாற்றியுள்ளதாக, இர்னா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு கடலில் இறங்கத் தடை – நாளை தொடக்கம் காற்றுடன் கடும் மழை?

வடக்கு, கிழக்கு, தென் மாகாணங்களில் உள்ள மீனவர்களை மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ மையம் எச்சரித்துள்ளது.