மேலும்

ஓய்வுபெற்ற பின்னர் அரசியலில் ஈடுபடக் கூடாது – சிறிலங்கா இராணுவத் தளபதி

Lieutenant General Mahesh Senanayakeஇராணுவ அதிகாரிகள் ஓய்வு பெற்ற பின்னர் எந்தச் சூழ்நிலையிலும் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி படைகளின் தலைமையகத்தில், கடந்த மாதம் 30ஆம் நாள் 1200 சிறிலங்கா படையினர் மற்றும் 150 அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“இராணுவ அதிகாரிகள் போரையோ அதில் இடம்பெற்ற சம்பவங்களையோ மறந்து விடக் கூடாது. ஓய்வு பெற்ற பின்னர் எந்தச் சூழ்நிலையிலும் அரசியலில் ஈடுபடக் கூடாது.

இராணுவத்தில் உள்ள எல்லா மட்டத்தினரும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது முக்கியம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *