மேலும்

நாள்: 27th December 2017

இந்திய பல்கலைக்கழகங்களில் 175 சிறிலங்கா மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

2018-19 கல்வியாண்டில், இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு, சிறிலங்கா மாணவர்கள் 175 பேருக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அதிகாரபூர்வமற்ற தேர்தல் முடிவுகளை ஊடகங்கள் வெளியிடத் தடை

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலின் போது, உறுதிப்படுத்தப்படாத, அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத தேர்தல் முடிவுகளை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அனைத்துலக சக்திகளால் தோற்கடிக்கப்பட்டேன் – புலம்பும் மகிந்த

2015 அதிபர் தேர்தலில் தான், தோற்கவில்லை என்றும் அனைத்துலக சக்திகளால் தோற்கடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

சனிக்கிழமை ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் ஆரம்பம்

ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதி எதிர்வரும் 30ஆம் நாள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று கொழும்பு தேயிலை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சீனா வழங்கிய 292.1 மில்லியன் டொலர் மத்திய வங்கியில் வைப்பு

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் பெறப்பட்ட முதற்கட்ட கொடுப்பனவான, 292.1 மில்லியன் டொலர் சிறிலங்கா மத்திய வங்கியின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் காவல்துறையினரின் பாதுகாப்பைப் பெற தயங்கும் தமிழ் அரசியல்வாதிகள்

வடக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கு சிங்களக் காவல்துறையினரே பாதுகாப்பு அளித்து வருகின்றனர் என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.