மேலும்

248 உள்ளூராட்சி சபைகளுக்கு வரும் 18 ஆம் நாள் வேட்புமனுத்தாக்கல் ஆரம்பம்

elections_secretariat248 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு நேற்று மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த நொவம்பர் 27ஆம் நாள், 93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்புகளுக்கமைய, இரண்டு கட்டங்களாக வேட்புமனுக்கள் கையேற்கப்படவுள்ளன.

முதற்கட்டமாக அறிவிக்கப்படட 93 உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனுக்கள், டிசெம்பர் 11ஆம் நாள் தொடக்கம் 14ஆம் நாள் வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

நேற்று இரண்டாவது கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள 248 உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனுக்கள், டிசெம்பர் 18ஆம் நாள் தொடக்கம் 21ஆம் நாள் வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

எனினும், எல்லா உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே நாளிலேயே தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *