மேலும்

நாள்: 12th December 2017

சாவகச்சேரி நகரசபைக்கு முதலாவது வேட்புமனுத் தாக்கல்- முந்தியது ஈபிடிபி

சாவகச்சேரி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு ஈபிடிபி இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளது. முதற்கட்டமாக உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்கு நேற்றுத் தொடக்கம் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து நியமனம்

சிறிலங்கா இராணுவத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து நியமிக்கப்பட்டுள்ளார் என்று இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

சாவகச்சேரியில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் தனித்துப் போட்டி – கட்டுப்பணம் செலுத்தினார் வரதர்

தமிழ் சமூக ஜனநாயக கட்சி என்று பெயரை மாற்றிக் கொண்ட வரதராஜப்பெருமாள் தலைமையிலான பத்மநாபா ஈபிஆர்எல்எவ் சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

வடக்கில் 50 முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்குகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 50 வரையான முஸ்லிம் வேட்பாளர்களைப் போட்டியில் நிறுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் தனித்துப் போட்டியிடுகிறது லங்கா சமசமாசக் கட்சி

உள்ளூராட்சித் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் தமது சொந்தச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக லங்கா சமசமாசக் கட்சி தெரிவித்துள்ளது.

யாழ். உள்ளூராட்சி சபைகள் குறித்து புளொட் – தமிழ் அரசுக் கட்சி இடையே ஆசனப் பங்கீட்டில் இணக்கம்

யாழ்ப்பாண மாவட்டத்தில், உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான, தமிழ் அரசுக் கட்சிக்கும், புளொட்டுக்கும் இடையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஈபிஆர்எல்எவ் வெளியேறினாலும் கூட்டமைப்புக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு – என்கிறார் சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஈபிஆர்எல்எவ் வெளியேறியுள்ள போதிலும், உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பிக்கும் காலஎல்லை நீடிப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொகமட் அறிவித்துள்ளார்.

மார்ச்சுக்குப் பின்னர் மாகாணசபைத் தேர்தல் – உச்சநீதிமன்றில் சட்டமா அதிபர் தெரிவிப்பு

எல்லை மீளமைப்பு செயற்பாடுகள் நிறைவடைந்த பின்னர்- அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின்னர் மாகாணசபைத் தேர்தல்களை நடத்த முடியும் என்று சட்டமா அதிபர் உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமருடன் இந்திய விமானப்படைத் தளபதி சந்திப்பு – பிராந்திய பாதுகாப்பு குறித்து பேச்சு

சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரேந்தர் சிங் டனோ சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.