மேலும்

நாள்: 23rd December 2017

உள்ளூராட்சித் தேர்தல் – இரண்டாவது கட்டத்தில் 1553 வேட்புமனுக்கள் ஏற்பு

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, இரண்டாவது கட்டமாக 1553 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக சிறிலங்கா தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொட்டுக்காக பரப்புரை செய்தால் கட்சியை விட்டு நீக்குவோம்- மகிந்தவுக்கு சுதந்திரக் கட்சி எச்சரிக்கை

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக- சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பரப்புரைகளை மேற்கொண்டால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க எச்சரித்துள்ளார்.

எதிர்ப்புகளுக்கு மத்தியில் விகாராதிபதியின் உடல் யாழ். முற்றவெளியில் தீயுடன் சங்கமம்

தமிழ் மக்களின் எதிர்ப்பு- சட்டரீதியான போராட்டத்துக்கு மத்தியில், யாழ். முற்றவெளியில், ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதியின் உடல் நேற்றுமாலை தீயுடன் சங்கமமானது.

யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக இருவருக்கு திறந்த இதய அறுவைச் சிகிச்சை

யாழ். போதனா மருத்துவமனையில் முதல் முறையாக இரண்டு பேருக்கு திறந்த இதய அறுவைச் சிசிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பந்தன் குணமடைகிறார் – இந்தியப் பயணமும் ரத்து

உடல்நலக் குறைவினால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் குணமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.