மேலும்

மாதம்: December 2017

ஆணைக்குழு அறிக்கையில் அர்ஜூன் மகேந்திரன், 9 அரசியல்வாதிகள் மீது வலுவான குற்றச்சாட்டுகள்?

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மீது வலுவான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இதனுடன் 9 அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிப்பதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பலஸ்தீன மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு சிறிலங்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் – மைத்திரி

பலஸ்தீன மக்களின் சுதந்திரத்துக்கான போராட்டத்துக்கு சிறிலங்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிதைக்கப்பட்ட, கிறுக்கப்பட்ட நாணயத்தாள்களை மாற்றுவதற்கான காலஅவகாசம் நீடிப்பு

சிதைக்கப்பட்ட, சேதமாக்கப்பட்ட, மற்றும் கிறுக்கப்பட்ட நாணயத்தாள்களை மாற்றிக் கொள்வதற்கான காலஅவகாசம் சிறிலங்கா மத்திய வங்கியினால் நீடிக்கப்பட்டுள்ளது.

1400 பக்க அறிக்கையை ஆராய்ந்த பின்னரே நடவடிக்கை குறித்த முடிவு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த விசாரணை அறிக்கை தொடர்பாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்னர், அதிபர் செயலக அதிகாரிகள் அதனை முழுமையாக ஆராயவுள்ளனர்.

புராதன பௌத்த சின்னம் என்ற பெயரில் சம்பூரில் முருகன் ஆலயத்தை ஆக்கிரமிக்க முயற்சி

திருகோணமலை- சம்பூர், சூடைக்குடா பகுதியில் புராதன பௌத்த எச்சங்கள் இருப்பதாக கூறி, முருகன் ஆலயம் அமைந்துள்ள பகுதியை சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களம் விரைவில் சுவீகரிக்கவுள்ளது.

ஆணைக்குழுவின் அறிக்கை சிறிலங்கா அதிபரிடம் கையளிப்பு

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக, விசாரிக்க அமைக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

மகிந்த அணிக்கு ‘செக்’ வைத்த தேர்தல்கள் ஆணைக்குழு

மகிந்த ராஜபக்சவின் படங்களை சிறிலங்கா பொதுஜன முன்னணி பயன்படுத்த முடியாத வகையில், தேர்தல்கள் ஆணைக்குழு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி – இன்று அல்லது நாளை அதிபர் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை

மத்திய வங்கி பிணைமுறி மோசடி  தொடர்பாக விசாரிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கை இன்று அல்லது நாளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

அமெரிக்காவின் ஜிஎஸ்பி சலுகை இழப்பினால் பெரிய தாக்கம் இல்லை என்கிறது சிறிலங்கா

அமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகை இழப்பு சிறிலங்காவின் ஏற்றுமதிகளில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தாது என்று, சிறிலங்காவின் தேசிய கொள்கைகள், மற்றும் பொருளாதார விவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கிறது சிறிலங்கா – அதிர்ச்சியுடன் தொடங்கும் புத்தாண்டு

புத்தாண்டு சிறிலங்காவுக்கு அதிர்ச்சியுடன் ஆரம்பமாகவுள்ளது. அமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகையை சிறிலங்கா 2018ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் நாளில் இருந்து இழக்கவுள்ளது.