மேலும்

நாள்: 17th December 2017

தேயிலை இறக்குமதி தடையை நீக்குமாறு ரஷ்ய அதிபரிடம் கோரவுள்ளார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவின் தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா விதித்துள்ள தடையை நீக்குமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் கோரவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா வந்தார் மலேசியப் பிரதமர்

மலேசியப் பிரதமர் அப்துல் நஜீப் ரசாக் மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று காலை சிறிலங்காவை வந்தடைந்தார். சிறப்பு விமானம் மூலம், மலேசியப் பிரதமர் இன்று காலை 8.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சிறிலங்கா தேயிலைக்குத் தடை – அவசர பேச்சு நடத்த மூன்று அமைச்சர்கள் ரஷ்யா பயணம்

சிறிலங்காவில் இருந்து தேயிலை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிக தடையை விதித்துள்ள நிலையில், இது தொடர்பாக அவசர பேச்சுக்களை நடத்துவதற்காக, சிறிலங்காவின் மூன்று அமைச்சர்கள் மொஸ்கோவுக்குச் செல்லவுள்ளனர்.

வேட்புமனுப் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்வோம் – என்கிறார் சம்பந்தன்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தயாரிப்பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார்.

வடக்கு முதல்வரையும் சந்திக்கிறார் மலேசியப் பிரதமர்

சிறிலங்காவுக்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ள மலேசியப் பிரதமர் மொகமட் நஜிப் பின் துவான் அப்துல் ரசாக், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

சிறிலங்காவில் இருந்து விடைபெறுகிறார் சீனத் தூதுவர்

சிறிலங்காவுக்கான சீனத் தூதுவராகப் பணியாற்றிய யி ஷியான்லியாங், பதவிக்காலம் முடிந்து நாளை நாடு திரும்பவுள்ளார்.

இன்று கொழும்பு வருகிறார் மலேசியப் பிரதமர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் மலேசியப் பிரதமர் டத்தோ சிறி மொகமட் நஜிப் பின் துவான் அப்துல் ரசாக் மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று சிறிலங்கா வரவுள்ளார்.

முதலமைச்சரின் கூட்டத்தை புறக்கணித்த மத்திய அரசு அதிகாரிகள் – மீண்டும் பனிப்போர்

காணிப் பிணக்குகள் குறித்து ஆராய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருந்த கூட்டத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திணைக்களங்கள் மற்றும் மன்னார் மாவட்ட பிரதேச செயலர்கள் புறக்கணித்துள்ளனர்.