மேலும்

நாள்: 22nd December 2017

உள்ளூராட்சித் தேர்தல் – வவுனியாவில் 12 அரசியல் கட்சிகள், 4 சுயேட்சைக் குழுக்கள் களத்தில்

வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி சபைகளுக்கு வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் 12 அரசியல் கட்சிகளும், 4 சுயேட்சைக் குழுக்களும் போட்டியில் குதித்துள்ளன.

உள்ளூராட்சித் தேர்தல் – மன்னாரில் 5 சபைகளுக்கு 11 கட்சிகள், 1 சுயேட்சைக் குழு போட்டி

வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில்,  மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்கும், 11 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சைக் குழுவும் போட்டியிடுகின்றன.

உள்ளூராட்சித் தேர்தல் – யாழ்ப்பாணத்தில் மோதும் 10 கட்சிகள், 7 சுயேட்சைக் குழுக்கள்

யாழ்ப்பாண மாவட்டத்தில்  16 உள்ளூராட்சி சபைகளில், 10 அரசியல் கட்சிகளும் 7 சுயேட்சைக் குழுக்களும் போட்டியில் குதித்துள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில்  உள்ள சாவகச்சேரி நகர சபை தவிர்ந்த 16 உள்ளூராட்சி சபைகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட 125 வேட்புமனுக்களில்,  5 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

உள்ளூராட்சித் தேர்தல் – முல்லைத்தீவு களத்தில் 11 அரசியல் கட்சிகள், 3 சுயேட்சைக் குழுக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள  4 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றுவதற்காக, 11 அரசியல் கட்சிகளும், 3 சுயேட்சைக் குழுக்களும் களத்தில் இறங்கியுள்ளன.

மகிந்த அணியின் 4 வேட்புமனுக்கள் யாழ்ப்பாணத்தில் நிராகரிப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, மகிந்த ராஜபக்ச ஆதரவு சிறிலங்கா பொதுஜன முன்னணி, யாழ்.மாவட்டத்தில் யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட 4 உள்ளூராட்சி சபைகளுக்குத் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சித் தேர்தல் – கிளிநொச்சியில் மல்லுக்கட்டும் 9 கட்சிகள், 3 சுயேட்சைக் குழுக்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 3 பிரதேச சபைகளுக்குமான  தேர்தல்களில் 09 அரசியல் கட்சிகளும்,  03 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

யாழ். மாநகரசபையில் 13 வட்டாரங்களைக் கோட்டை விட்டது உதயசூரியன் கூட்டணி

யாழ். மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமிழர் விடுதலைக் கூட்டணி தாக்கல் செய்த வேட்புமனுவில் இருந்த 13 வேட்பாளர்களின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சித் தேர்தல் – மட்டக்களப்பில் 79 வேட்புமனுக்கள் ஏற்பு

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு  மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட  79 வேட்புமனுக்கள் தேர்தல் அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

அடுத்தவாரம் காங்கேசன்துறையில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது பயணிகள் கப்பல்

சிதம்பரத்தில் நடைபெறும் திருவாதிரை உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்காக, காங்கேசன்துறையில் இருந்து சென்னைக்கு பயணிகள் கப்பல் சேவையை நடத்த இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.