மேலும்

நாள்: 10th December 2017

93 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை தொடங்குகிறது வேட்புமனுத் தாக்கல்

சிறிலங்காவில் 93 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகவுள்ளது. முதல் கட்டமாக வேட்புமனுக்கள் கோரப்பட்ட சாவகச்சேரி நகரசபை உள்ளிட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை வேட்புமனுத் தாக்கல் ஆரம்பமாகிறது.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான ஆசனப்பங்கீடு விபரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில், உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களை நிறுத்துவதற்கான ஆசனப்பங்கீடுகள் நிறைவுபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலுக்கு மாவட்ட முகவர்களை நியமித்தது தமிழ் அரசுக் கட்சி

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் அரசுக் கட்சி மாவட்ட ரீதியில் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களின் விபரங்களை, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.

சிங்கள மொழி தோன்ற முன்னர் சிங்கள மன்னன் எப்படி உருவானான்?- சரத் வீரசேகரவுக்கு விக்கி பதிலடி

அண்மையில் றியர் அட்மிரல் சரத் வீரசேகரவால் ‘சிலோன் ருடே’ ஊடகத்திற்கு ‘விக்னேஸ்வரன் பதவி விலகவேண்டும்’ என்கின்ற தலைப்பில் வழங்கப்பட்ட நேர்காணல் தொடர்பாக பதிலளிக்க வேண்டிய தேவையுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டம் நிறைவேறியது

உள்ளூராட்சித் தேர்தல்கள் கட்டளைத் திருத்தச் சட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல உறுப்பினர் வட்டாரங்களுக்கான நியமனங்கள் தொடர்பாக, தமிழ், சிங்கள வரைவுகளுக்கிடையில் உள்ள வேறுபாடுகளை களையும் வகையில், இந்த திருத்தச்சட்டம் முன்வைக்கப்பட்டது.

40 ஆண்டுகளில் சிறிலங்காவின் கையில் கிடைத்த மிகப்பெரிய வெளிநாட்டு கொடுப்பனவு

நான்கு பத்தாண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்கா பிரதமருக்கு மிகப் பெருமளவு தொகைக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 99 ஆண்டு குத்தகை உரிமையைப் பெற்றுக் கொண்ட சீன மேர்ச்சன்ட்ஸ் குழுமம் என்ற சீன நிறுவனமே, சுமார் 292 மில்லியன் டொலருக்கான காசோலையை வழங்கியுள்ளது.

சிறிலங்காவில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டார் மலேசிய தூதுவர்

மலேசியப் பிரதமர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், கொழும்பில் உள்ள தமது தூதுவரை மலேசிய அரசாங்கம் திருப்பி அழைத்துள்ளது.

யாழ். கோட்டையில் உணவுத் திருவிழா நடத்தும் சிறிலங்கா இராணுவம்

யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால், யாழ்.உணவுத் திருவிழா நடத்தப்படவுள்ளது. வரும் 15ஆம் நாள் தொடக்கம், 17ஆம் நாள் வரை இந்த உணவுத் திருவிழா இடம்பெறவுள்ளதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.