மேலும்

நாள்: 2nd December 2017

20 கட்சிகளுடன் மகிந்த தலைமையில் கூட்டு பொதுஜன முன்னணி உருவாக்கம்

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக மகிந்த ராஜபக்சவின் தலைமையில் கூட்டு பொதுஜன முன்னணி என்ற பெயரில், புதிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிழக்கில் ஹசன் அலி – ரிசாத் கட்சிகள் கூட்டணி

உள்ளூராட்சித் தேர்தலில் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், கிழக்கு மாகாணத்தில், ஹசன் அலி தலைமையிலான ஐக்கிய சமாதான கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் ஈடுபட்ட 6 பேர் கொழும்பு, வவுனியாவில் கைது

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுகள் உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபட்ட ஆறு இளைஞர்கள் கொழும்பிலும், வவுனியாவிலும் மறைந்திருந்த போது, சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேவநம்பிய தீசன் தமிழ் மன்னனா? – விக்னேஸ்வரனுக்கு சரத் வீரசேகர பதில்

தேவநம்பிய தீசன் ஒரு தமிழ் மன்னன் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்  கூறியிருந்த நிலையில், தீசன் என்பது சிங்கள அரசரின் பெயர் என்றும், சிறிலங்காவின் மூலப் பெயர் சிங்கலே என்றும் கூறியிருக்கிறார் றியர் அட்மிரல் சரத் வீரசேகர.

‘சாகர்’ புயல் வரும் 5ஆம் நாள் வடக்கு, கிழக்கைத் தாக்கும் ?

அந்தமான் தீவுப் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம், தீவிரமடைந்து வருவதால், சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு அடுத்த வாரத்தில் கடும் மழை பெய்வதற்குச் சாத்தியங்கள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல்

எல்லை நிர்ணயம் தொடர்பான அரசிதழுக்கு எதிரான மனுக்கள் மீளப் பெறப்பட்டதை அடுத்து, அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்த சிறிலங்காவின் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடிய இளைஞனிடம் சிறிலங்கா காவல்துறை விசாரணை

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடினார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக, முல்லைத்தீவில் இளைஞன் ஒருவர்  சிறிலங்கா காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் – சிறிலங்கா படைச் சிப்பாய் கைது

கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் சிறிலங்கா காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.