மேலும்

மாதம்: December 2017

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை – சிறிலங்காவில் வதிவிட சட்ட ஆலோசகரை நியமிக்கிறது அமெரிக்கா

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், சொத்துக்களை மீட்பதற்கான பயிற்சிகளை அளிப்பதற்கும், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு உதவவும், சிறிலங்காவுக்கு வதிவிட சட்ட ஆலோசகர் ஒருவரை அமெரிக்கா வழங்கவுள்ளது.

அடுத்த கட்டம் குறித்து முடிவெடுக்க முடியாத நிலையில் ரெலோ

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான ஆசனப் பங்கீட்டுப் பேச்சுக்கள் தோல்வியடைந்ததை அடுத்து, தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்த ரெலோ, அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ் தேசிய பேரவை என்ற பெயரில் புதிய கூட்டமைப்பை உருவாக்கியது தமிழ் காங்கிரஸ்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நேற்று மற்றொரு புதிய அரசியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய பேரவை என்று பெயரில் இந்தப் புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகரசபைக்கு கட்டுப்பணம் செலுத்தியது தமிழ் அரசுக் கட்சி

சாவகச்சேரி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

கோத்தா கைதுக்கு இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு விதித்திருந்த இடைக்காலத் தடை உத்தரவை மேல்முறையீட்டு நீதிமன்றம் டிசெம்பர் 15ஆம் நாள் வரை நீடித்துள்ளது.

உதயசூரியன் சின்னத்தில் புதிய அரசியல் கூட்டணி

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில், புதியதொரு அரசியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மகிந்த இல்லாமலேயே சுதந்திரக் கட்சி வெற்றி பெறும் – மகிந்த சமரசிங்க

மகிந்த ராஜபக்ச இல்லாமலேயே வரும் உள்ளூராட்சித் தேர்தல்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெறும் என்று அந்தக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நெஸ்பி பிரபுவின் அறிக்கை பிரித்தானிய அரசின் நிலைப்பாடு அல்ல – தூதரகம் அறிக்கை

சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தொடர்பாக பிரித்தானிய பிரபுக்கள் சபையில், நெஸ்பி பிரபு வெளியிட்ட அறிக்கை, பிரித்தானியாவின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை என்று கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் எந்த இணையத்தளத்துக்கும் தடையில்லை – மங்கள சமரவீர

சிறிலங்காவில் எந்தவொரு செய்தி இணையத்தளத்துக்கும் தடை விதிக்கப்படவில்லை என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நெருங்கியது காற்றழுத்தம் – சூறாவளி ஆபத்து இல்லை என்கிறது சிறிலங்கா

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம், சிறிலங்காவை நெருங்கியுள்ள நிலையிலும்,  சூறாவளி தாக்கும் ஆபத்து ஏதும் இல்லை என்று சிறிலங்காவின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.