மேலும்

நாள்: 4th December 2017

பெப்ரவரி 17இற்கு முன் உள்ளூராட்சித் தேர்தல் – மகிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சித் தேர்தல்கள் வரும் பெப்ரவரி 17ஆம் நாள் அல்லது அதற்கு முன்னதாக நடத்தப்படும் என்று சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் தத்தளித்த 5 சிறிலங்கா மீனவர்களை மீட்டது ஈரானிய எண்ணெய் கப்பல்

படகு கவிழ்ந்த நிலையில் இந்தியப் பெருங்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறிலங்கா மீனவர்கள் ஐந்து பேரை ஈரானிய எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்று காப்பாற்றியுள்ளதாக, இர்னா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு கடலில் இறங்கத் தடை – நாளை தொடக்கம் காற்றுடன் கடும் மழை?

வடக்கு, கிழக்கு, தென் மாகாணங்களில் உள்ள மீனவர்களை மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ மையம் எச்சரித்துள்ளது.

கொழும்புத் துறைமுகத்தில் பிரெஞ்சுப் போர்க்கப்பல்

பிரெஞ்சுக் கடற்படையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட போர்க்கப்பலான FS Auvergne  நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.

தமிழ்க் குடும்பத்தை சிறிலங்காவுக்கு நாடுகடத்தியது கனடா

ஐந்து ஆண்டுகளாக கனடாவில் வசித்து வந்த தமிழ்க் குடும்பம் ஒன்று, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்று சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. நேற்றுமாலை மொன்றியல் விமான நிலையத்தில் இருந்து இவர்கள் விமானம் ஒன்றில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

வடக்கிலும் போட்டியில் குதிக்கிறது இதொகா

வரப்போகும் உள்ளூராட்சித் தேர்தல்களில் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி வடக்கில் சேவல் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

ஆனந்தசங்கரியுடனான கூட்டு தற்காலிக ஏற்பாடு தான் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

உள்ளூராட்சித் தேர்தல் தேசிய அளவில் முக்கியத்துவமற்றது என்றும், இந்தத் தேர்தலில், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடும் தமது முடிவு தற்காலிக ஏற்பாடு தான் என்றும் ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பலமான கூட்டணியாக கூட்டமைப்பு போட்டியிடும் – மாவை

உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஆசனப்பங்கீடுகள் மற்றும் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் நேற்று 6 மணிநேரம் பேச்சுக்களை நடத்தியுள்ளன. நேற்று மாலை 3 மணிக்கு ஆரம்பித்த பேச்சுக்கள், இரவு 9 மணி வரை நீடித்தன.