மேலும்

மகிந்த அணியின் 4 வேட்புமனுக்கள் யாழ்ப்பாணத்தில் நிராகரிப்பு

SLPPஉள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, மகிந்த ராஜபக்ச ஆதரவு சிறிலங்கா பொதுஜன முன்னணி, யாழ்.மாவட்டத்தில் யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட 4 உள்ளூராட்சி சபைகளுக்குத் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

நேற்று நண்பகலுடன் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் கால எல்லை முடிவடைந்ததை அடுத்து, வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதன்போது, யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியினால் 16 உள்ளூராட்சி சபைகளுக்கும் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

அதேவேளை, யாழ்ப்பாண மாநகரசபை, வலி.கிழக்கு, நெடுந்தீவு, வலி.வடக்கு பிரதேச சபைகளுக்கு, சிறிலங்கா பொதுஜன முன்னணி தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

யாழ். மாநகரசபைக்காக, தமிழர் விடுதலைக் கூட்டணி தாக்கல் செய்த வேட்புமனுவில் இருந்த 13 வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டனர்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு சுயேட்சைக் குழுவொன்று தாக்கல் செய்த வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.

வல்வெட்டித்துறை நகர சபைக்கு சிறிலங்கா பொதுஜன முன்னணியினால்  தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் இருந்த ஒரு வேட்பாளர் நிராகரிக்கப்பட்டுள்ளார்.

ஊர்காவற்துறை பிரதேச சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி தாக்கல் செய்த வேட்புமனுவில் இடம்பெற்ற  ஒரு வேட்பாளரும் நிராகரிக்கப்பட்டார்.

வலி. வடக்கு பிரதேச சபைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி தாக்கல் செய்த வேட்புமனுவில், இருந்த  ஒரு வேட்பாளர் நிராகரிக்கப்பட்டுள்ளார்.

வலி. தெற்கு பிரதேச சபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தாக்கல் செய்த வேட்புமனுவில் இடம்பெற்ற வேட்பாளர் ஒருவரும் நிராகரிக்கப்பட்டுள்ளார்.

வலி.கிழக்கு பிரதேச சபைக்கு ஈ.பி.டி.பி. தாக்கல் செய்த வேட்புமனுவில் இருந்த வேட்பாளர் ஒருவரும் நிராகரிக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பிரதேச சபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தாக்கல் செய்த வேட்புமனுவில் இடம்பெற்றிருந்த வேட்பாளர்  ஒருவரும் நிராகரிக்கப்பட்டார்.

இதற்கிடையே, முல்லைத்தீவு மாவட்டத்தில், இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சார்பில், துணுக்காய் பிரதேச சபைக்குத் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு  நிராகரிக்கப்பட்டதுடன், புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்காக  அந்தக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவில் இடம்பெற்றிருந்த வேட்பாளர் ஒருவரின் பெயரும் நிராகரிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *