மேலும்

உள்ளூராட்சித் தேர்தல் – முல்லைத்தீவு களத்தில் 11 அரசியல் கட்சிகள், 3 சுயேட்சைக் குழுக்கள்

mullaitivu-DSமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள  4 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றுவதற்காக, 11 அரசியல் கட்சிகளும், 3 சுயேட்சைக் குழுக்களும் களத்தில் இறங்கியுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 4 பிரதேச சபைகளுக்கும் நடக்கவுள்ள தேர்தலில் போட்டியிடுவதற்காக, 11 அரசியல் கட்சிகளும்,  3 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.

இங்கு போட்டியிடுவதற்காக கட்டுப் பணம் செலுத்திய ஒரு அரசியல் கட்சியும், சுயேட்சைக் குழுவொன்றும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவில்லை

வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, துணுக்காய் பிரதேச சபைக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து,  11 அரசியல் கட்சிகளும், 3 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஜேவிபி, சிறிலங்கா பொதுஜன முன்னணி, ஈபிடிபி, தேசிய மக்கள் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய 10 அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன.

புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஜேவிபி, சிறிலங்கா பொதுஜன முன்னணி, ஈபிடிபி, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய 9 அரசியல் கட்சிகளுடன் ஒரு சுயேட்சைக் குழுவும் போட்டியிடுகிறது.

துணுக்காய் பிரதேச சபைக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஜேவிபி, சிறிலங்கா பொதுஜன முன்னணி, ஈபிடிபி. ஆகிய 7 அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன.

மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஜேவிபி, சிறிலங்கா பொதுஜன முன்னணி, ஈபிடிபி  ஆகிய 8 அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *