மேலும்

உள்ளூராட்சித் தேர்தல் – வவுனியாவில் 12 அரசியல் கட்சிகள், 4 சுயேட்சைக் குழுக்கள் களத்தில்

elections_secretariatவவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி சபைகளுக்கு வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் 12 அரசியல் கட்சிகளும், 4 சுயேட்சைக் குழுக்களும் போட்டியில் குதித்துள்ளன.

வவுனியா மாவட்டத்தில் உள்ள  5 உள்ளூராட்சி சபைகளுக்குப் போட்டியிடுவதற்காக, 45 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. இதில்,  ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

12 அரசியல் கட்சிகள் மற்றும் 4 சுயேட்சைக் குழுக்களினதும், 44 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

வவுனியா நகர சபைக்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், அகில இலங்கை தமிழர் மகாசபை, ஈபிடிபி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி, தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா பொதுஜன முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய  10 அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன.

வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபைக்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி, தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா பொதுஜன முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய 8 அரசியல்  கட்சிகள் போட்டியில் குதித்துள்ளன.

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தேசிய சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி,  தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா பொதுஜன முன்னணி, சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி  9 அரசியல் கட்சிகளும் 1 சுயேட்சைக் குழுவும் போட்டியிடுகின்றன.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு 9 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சைக் குழுவும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைக்கு 4 அரசியல் கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *