மேலும்

உள்ளூராட்சித் தேர்தல் – மன்னாரில் 5 சபைகளுக்கு 11 கட்சிகள், 1 சுயேட்சைக் குழு போட்டி

mannar-election-officeவரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில்,  மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்கும், 11 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சைக் குழுவும் போட்டியிடுகின்றன.

மன்னார் மாவட்டத்தில் கட்டுப் பணம் செலுத்திய 11 அரசியல் கட்சிகளும், 1 சுயேட்சைக் குழுவும், வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. இவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வேட்புமனுக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இதற்கமைய, மன்னார் நகர சபைக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈபிடிபி , ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்கா பொதுஜன முன்னணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய 9 அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன.

மன்னார் பிரதேச சபைக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈபிடிபி, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்கா பொதுஜன முன்னணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகிய 8 அரசியல் கட்சிகள் களத்தில் உள்ளன.

நானாட்டான் பிரதேச சபைக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈபிடிபி, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்கா பொதுஜன முன்னணி, ஜேவிபி ஆகிய 8 அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன.

முசலி பிரதேச சபைக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈபிடிபி, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்கா பொதுஜன முன்னணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 10 அரசியல் கட்சிகள் களத்தில் உள்ளன.

மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஈபிடிபி, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்கா பொதுஜன முன்னணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகிய 8 அரசியல் கட்சிகள், மற்றும் ஒரு சுயேட்சைக்குழு என்பன போட்டியிடுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *