மேலும்

உள்ளூராட்சித் தேர்தல் – யாழ்ப்பாணத்தில் மோதும் 10 கட்சிகள், 7 சுயேட்சைக் குழுக்கள்

JAFFNAயாழ்ப்பாண மாவட்டத்தில்  16 உள்ளூராட்சி சபைகளில், 10 அரசியல் கட்சிகளும் 7 சுயேட்சைக் குழுக்களும் போட்டியில் குதித்துள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில்  உள்ள சாவகச்சேரி நகர சபை தவிர்ந்த 16 உள்ளூராட்சி சபைகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட 125 வேட்புமனுக்களில்,  5 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதையடுத்து, 10 அரசியல் கட்சிகள் மற்றும் 7 சுயேட்சைக் குழுக்களால் தாக்கல் செய்யப்பட்ட 120 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, யாழ்ப்பாண மாநகர சபைக்கான தேர்தலில் 8 அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன.

வல்வெட்டித்துறை நகரசபைக்கு, 7 அரசியல் கட்சிகள் மற்றும் 1 சுயேட்சைக் குழுவும், பருத்தித்துறை நகரசபைக்கு , 7 அரசியல் கட்சிகள் மற்றும் 1 சுயேட்சைக் குழுவும் களத்தில் உள்ளன.

காரைநகர் பிரதேச சபைக்கு  7 அரசியல் கட்சிகள் மற்றும் 1 சுயேட்சைக் குழுவும், ஊர்காவற்றுரை பிரதேச சபைக்கு 7 அரசியல் கட்சிகளும்,  நெடுந்தீவு பிரதேச சபைக்கு 5 அரசியல் கட்சிகள் மற்றும் 1 சுயேட்சைக் குழுவும், வேலணை பிரதேச சபைக்கு 8 அரசியல் கட்சிகளும், வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு 8 அரசியல் கட்சிகள் மற்றும் 1 சுயேட்சைக் குழுவும், வலி.வடக்கு பிரதேசசபைக்கு 6 அரசியல் கட்சிகளும், வலி.தென்மேற்கு பிரதேச சபைக்கு 7 அரசியல் கட்சிகளும், வலி.தெற்கு பிரதேச சபைக்கு 7 அரசியல் கட்சிகளும், வலி.கிழக்கு பிரதேச சபைக்கு, 6 அரசியல் கட்சிகள் மற்றும் 1 சுயேட்சைக் குழுவும், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்கு 7 அரசியல் கட்சிகளும், பருத்தித்துறை பிரதேச சபைக்கு 7 அரசியல் கட்சிகளும், சாவகச்சேரி பிரதேச சபைக்கு 9 அரசியல் கட்சிகளும், நல்லூர் பிரதேச சபைக்கு 8 அரசியல் கட்சிகள் மற்றும் 1 சுயேட்சைக் குழுவும் போட்டிக் களத்தில் இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *