சாமர சம்பத் தசநாயக்கவுக்கு விளக்கமறியல்
இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் நேற்று கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தசநாயக்க, ஒக்டோபர் 23 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் நேற்று கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தசநாயக்க, ஒக்டோபர் 23 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மொன்டானா மாநில ஆளுநர் கிரெக் கியான்ஃபோர்டே (Greg Gianforte) சிறிலங்காவின் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக, 44 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று நாடாளுமன்றச் செயலாளர் குஷானி ரோகனதீரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பௌத்த பிக்குகள் சம்பந்தப்பட்ட சூழ்நிலைகளைக் கையாளும் வகையில் சட்டத் திருத்தங்கள் செய்வது குறித்து, குழுவொன்றை அமைத்து இரண்டு வாரங்களுக்குள் திருத்தங்களை முன்மொழிய நடவடிக்கை எடுப்பதாக மகாசங்கத்தினரிடம் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த குற்றத்திற்காக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விதித்த 9 மாத சிறைத் தண்டனையை கொழும்பு மேல்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அமெரிக்க கடற்படையின் இன்டிபென்டன்ஸ் ரக கடலோரப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் துல்சா (USS Tulsa-LCS 16), இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள், சிறைச்சாலைகள் திணைக்களத்தால் வழங்கப்படும் சிறை சீருடையை அணிந்தே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக பல்லெதென்ன தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து சிறிலங்காவுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க பசுபிக் இராணுவத்தின் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜோயல் வோவெல், சிறிலங்காவின் அடுத்த தலைமுறை இராணுவ அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தின் 20 அதிகாரிகள் மற்றும் 55 படையினரைக் கொண்ட குழுவினர், ரஷ்யப் படையினருடனான கூட்டுப் பயற்சியை நிறைவு செய்துள்ளனர்.