மேலும்

சிறிலங்காவுக்கு மூன்று ரோந்துப் படகுகளை வழங்குகிறது அவுஸ்ரேலியா

Stabicraft vesselsசிறிலங்காவுக்கு மூன்று ஸ்டபி கிராப்ட் வகை படகுகளை (Stabicraft vessels) அவுஸ்ரேலியா வழங்கவுள்ளது. நேற்றுக்காலை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த, அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல், சிறிலங்கா அஅதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த போது இதற்கான உறுதி மொழியை அளித்துள்ளார்.

சிறிலங்கா கடலோரக் காவல்படையின் பயன்பாட்டுக்காகவே, அதிவேக ஸ்டபி கிராப்ட் படகுகளை அவுஸ்ரேலியா வழங்கவுள்ளது.

இவை, கரையோர நடவடிக்கைகளுக்குப் பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவுஸ்ரேலியப் பிரதமர் கூறியுள்ளார்.

ஆட்களைக் கடத்தும் நடவடிக்கைகள், போதைப்பொருட் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் சிறிலங்காவின் ஒத்துழைப்புக்கும் அவுஸ்ரேலியப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

Stabicraft vessels

ஏற்கனவே சிறிலங்கா கடற்படைக்கு மூன்று அதிவேக ரோந்துப் படகுகளை அவுஸ்ரேலியா வழங்கியிருந்தது. இந்தநிலையில், மேலும் மூன்று அதிவேக ரோந்துப் படகுகளை வழங்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *