மேலும்

அட்மிரல் சின்னையாவுக்கு அநீதி இழைக்கப்படவில்லை – சிறிலங்கா அரசாங்கம்

Vice Admiral Travis Sinniahசிறிலங்காவின் கடற்படைத் தளபதி பதவியில் இருந்து கடந்த வாரம் ஓய்வுபெற்ற  அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவுக்கு அநீதி இழைக்கப்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபரின் சேவை நீடிப்புக் கிடைக்காமையினால், அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா இரண்டு மாதங்களிலேயே கடற்படைத் தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெறும் நிலை ஏற்பட்டது.

அட்மிரல் சின்னையாவுக்கு சேவை நீடிப்பு வழங்கப்படாமை குறித்து சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், இதுதொடர்பாக, விளக்கமளித்த அமைச்சரவைப் பேச்சாளர்களான தயாசிறி ஜெயசேகரவும், ராஜித சேனாரத்னவும், அட்மிரல் சின்னையாவுக்கு அநீதி இழைக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

அட்மிரல் சின்னையாவுக்கு சேவை நீடிப்பு அளிக்கப்பட்டால் அவருக்கு பின்னால் உள்ள அதிகாரிகளுக்கு அநீதியாக அமையும்.

அவரை தொடர்ந்து பதவியில் அமர்த்தினால், அவரை விட இளநிலையில் உள்ள கடற்படை அதிகாரிகள், கடற்படைத் தளபதியாக நியமிக்கப்படும் வாய்ப்பை இழக்க நேரிடும்.

படைகளின் இணையும் அனைவருக்கும் தளபதியாவது ஒரு கனவு. சிறந்த சேவையாற்றிய அவர்களுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்.

விடுதலைப் புலிகளின் 6 ஆயுதக்கப்பல்களை மூழ்கடித்து அட்மிரல் சின்னையா நாட்டுக்காக பெரும் பணி ஆற்றியிருக்கிறார்.

அவர் எவ்வளவு காலம் கடற்படைத்தளபதியாக இருந்தார் என்பதை விட, கடற்படைத் தளபதி என்ற பதவியில் இருந்தார் என்பதே முக்கியம்” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *