மேலும்

மாதம்: September 2017

கொழும்பு மேல்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக லலித், அனுஷ மேல்முறையீடு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் செயலராக இருந்த லலித் வீரதுங்கவும், தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்டவும், தமக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்துள்ளனர்.

சன் சீ கப்பல் விவகாரம் – இலங்கை தமிழருக்கு கனடாவில் 4 ஆண்டு சிறைத்தண்டனை

தமிழ் குடியேற்றவாசிகளை சட்டவிரோதமாக கனடாவுக்கு கப்பல் மூலம் அழைத்து வந்தார் என்ற குற்றச்சாட்டில், இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய உச்சநீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

சிறிலங்கா காலவரம்பு நிர்ணயித்து துரிதமாகச் செயற்பட வேண்டும் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

காணாமல்போனோர் பணியகத்தை சிறிலங்கா உடனடியாக செயற்படுத்த வேண்டும் என்றும், ஏனைய நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வலியுறுத்தியுள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு கிழக்கு, மேல் மாகாணசபைகள் அங்கீகாரம்

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள, 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைவுக்கு, கிழக்கு மாகாணசபையும், மேல் மாகாணசபையும் இன்று அங்கீகாரம் அளித்துள்ளன.

அஸ்கிரிய பீடத்தில் சங்கடமான நிலையை எதிர்கொண்ட விக்னேஸ்வரன் – ஏமாற்றத்துடன் திரும்பினார்

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரை தனியாகச் சந்திக்கச் சென்ற வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சங்கடமான நிலையை எதிர்கொண்டு, அதிருப்தியுடனும் ஏமாற்றத்துடனும் திரும்பும் நிலை ஏற்பட்டது.

சிறிலங்கா படையினரை வெளிநாட்டு சக்திகளிடம் இருந்து பாதுகாப்போம் – மைத்திரி சூளுரை

போர் வீரர்களைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கை நிகழ்ச்சி நிரல் மிகவும் வலுவானது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் தனித்தே போட்டி – கூட்டணி கிடையாது

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

வியட்னாம் தீவு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்ட சிறிலங்காவின் ஜெனரல்கள்

சிறிலங்காவின் ஓய்வுபெற்ற மூத்த படைத் தளபதிகளும் அவர்களின் மனைவிமாரும், வியட்னாமில் உள்ள தீவு ஒன்றில் கடந்த வாரம் தடுத்து வைக்கப்பட்டதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

படையினர் எவரும் போர்க்குற்றம் புரியவில்லை – என்கிறார் சிறிலங்கா அமைச்சர்

முப்படைகள், காவல்துறை, சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த எவருமே, எந்தவொரு போர்க்குற்றங்களையும் இழைக்கவில்லை என்று சிறிலங்காவின்  வீடமைப்பு மற்றும் கட்டுமானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகளை எண்ண முடிவு

அடுத்த உள்ளூராட்சித் தேர்தலின் போது, வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.