மேலும்

நாள்: 12th September 2017

பிரதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் அருந்திக பெர்னான்டோ

சுற்றுலா ஊக்குவிப்பு மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் அருந்திக பெர்னான்டோவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பதவிநீக்கம் செய்துள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு சப்ரகமுவ மாகாணசபையும் ஆதரவு

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு, சப்ரகமுவ மாகாணசபையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

வடகொரிய விவகாரம் – சிறிலங்கா அதிபருக்கு ஐ.நாவில் சிக்கல்

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வடகொரியா தொடர்பான ஐ.நாவின் கடுமையான கேள்விகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் மக்களை சிறிலங்கா அரசு நம்பவில்லை – விக்னேஸ்வரன்

வடக்கில் இராணுவத் தளங்களை மூடுவதற்கு மறுப்பதானது, தமிழ் மக்களை சிறிலங்கா அரசாங்கம் நம்பவில்லை என்பதையே அர்த்தப்படுத்துகிறது  என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வெலிக்கடைப் படுகொலைகள் – கோத்தா, ஜெனரல் ஜெயசூரியவிடம் நாளை விசாரணை

வெலிக்கடைச் சிறைச்சாலையில் 27 கைதிகள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாய ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய உள்ளிட்ட உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

கொழும்பு மேல்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக லலித், அனுஷ மேல்முறையீடு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் செயலராக இருந்த லலித் வீரதுங்கவும், தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்டவும், தமக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்துள்ளனர்.

சன் சீ கப்பல் விவகாரம் – இலங்கை தமிழருக்கு கனடாவில் 4 ஆண்டு சிறைத்தண்டனை

தமிழ் குடியேற்றவாசிகளை சட்டவிரோதமாக கனடாவுக்கு கப்பல் மூலம் அழைத்து வந்தார் என்ற குற்றச்சாட்டில், இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய உச்சநீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்துள்ளது.