மேலும்

நாள்: 27th September 2017

வித்தியா கொலை வழக்கில் 7 பேருக்கு மரணதண்டனை – 3 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், 7 எதிரிகள்  குற்றவாளிகள் என்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பாயத்தின் மூன்று நீதிபதிகளும், தீர்ப்பளித்துள்ளனர்.

சுவிஸ் குமாரை தப்பிக்க வைக்க முயன்றார் அமைச்சர் விஜயகலா – நீதிபதி குற்றச்சாட்டு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில், பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமாரை தப்பிக்க வைக்க இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முனைந்துள்ளார் என்று நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

இரண்டு நீதிபதிகள் ஒரே தீர்ப்பு – நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பு ஆரம்பம்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில், தீர்ப்பாயத்தின் தலைவரான, நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தனது தீர்ப்பை வாசித்து முடித்துள்ள நிலையில், தீர்ப்பாயத்தின் மற்றொரு நீதிபதியான, மாணிக்கவாசகர் இளஞ்செயழியன் தனது தீர்ப்பை படித்து வருகிறார்.

வித்தியா கொலை வழக்கு – 4 எதிரிகள் கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டதை உறுதிப்படுத்தியது தீர்ப்பாயம்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில், நான்கு எதிரிகள் கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டனர் என்பதை, மூன்று நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.

332 பக்கங்களில் வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் தீர்ப்பு, யாழ். மேல் நீதிமன்றத்தில் தற்போது வாசிக்கப்பட்டு வருகிறது.

நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர்

அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைதிக்கான ஒஸ்லோ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

பெல்ஜியம் வெளிவிவகார அமைச்சருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேச்சு

பெல்ஜியத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அந்த நாட்டின் பிரதிப் பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான, டிடியர் ரென்டேர்சுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

ரொஹிங்யா அகதிகளுக்கு எதிராக கல்கிசையில் பௌத்த பிக்குகள் போர்க்கொடி

மியான்மாரின் ரொஹிங்யா அகதிகளை சிறிலங்காவில் தங்க வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரொஹிங்யா அகதிகள் தங்கியிருந்த வீட்டை பௌத்த பிக்குகள் அடங்கிய அடிப்படைவாதிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வித்தியா கொலை வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது சிறப்பு தீர்ப்பாயம்

சிறிலங்காவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.

சுங்கப் பணிப்பாளராக மட்டக்களப்பு அரச அதிபர் சார்ள்ஸ் நியமனம்

சிறிலங்காவின் சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் சூலானந்த பெரேரா, அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, புதிய பணிப்பாளராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.