மேலும்

நாள்: 9th September 2017

இந்தியத் தூதரகத்தின் புதிய உதவிப் பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சந்திப்பு

இந்தியத் தூதரக உதவிப் பாதுகாப்பு ஆலோசகராக, லெப்.கேணல் ரவி மிஸ்ரா அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

லலித் வீரதுங்க அப்பாவி, எந்த தவறையும் செய்யவில்லை- என்கிறார் மகிந்த

தமது முன்னாள் செயலராகப் பணியாற்றிய லலித் வீரதுங்க எந்த தவறையும் செய்யவில்லை என்றும், நாட்டின் பௌத்தர்களுக்கு அவர் ஆற்றிய பணிக்காகவே இந்த நிலைக்கு உள்ளாகியிருப்பதாகவும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சுஸ்மாவை சந்தித்தார் திலக் மாரப்பன

இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன,  இநதிய வெளிவிவகார அமைச்சர் சுமூஸ்மா சுவராஜைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

வல்லுறவுக் குற்றம்சாட்டப்பட்ட சர்ச்சைக்குரிய பாஜக தலைவருடன் திலக் மாரப்பன சந்திப்பு

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை, பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சர்ச்சைக்குரிய பாஜக தலைவர் ஒருவரே முதலில் சந்தித்துப் பேசியுள்ளார்.

அமெரிக்க, சீன பாதுகாப்பு ஆலோசகர்கள் சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் பேச்சு

சிறிலங்காவின் கடற்படைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை, அமெரிக்க, சீன பாதுகாப்பு ஆலோசகர்கள் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவு – விரைவில் உச்சநீதிமன்றத்தின் முடிவு

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு தொடர்பான தமது தீர்மானத்தை உச்சநீதிமன்றம் விரைவில் அறிவிக்கவுள்ளது.

சில் துணி வழக்கு உங்கள் மீதும் பாயும் – மைத்திரியின் மனைவிக்கு மகிந்த மறைமுக எச்சரிக்கை

தற்போதைய முதல் பெண்மணி மீதும் கூட சில் துணிகளை விநியோகம் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்று வழக்கும் தொடுக்கப்படலாம் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றுமாலை புதுடெல்லி வந்தார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மூன்று நாட்கள் பயணமாக நேற்று மாலை புதுடெல்லியை வந்தடைந்தார். அவரை இந்திராகாந்தி விமான நிலையத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும், புதுடெல்லியில் உள்ள சிறிலங்காவின் தூதுவர் சித்ராங்கனி வகீஸ்வரா உள்ளிட்ட அதிகாரிகளும் வரவேற்றனர்.