மேலும்

நாள்: 6th September 2017

வடக்கு, கிழக்கில் 66 வீதிகளை புனரமைக்க சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள 66 வீதிகளை புனரமைப்புச் செய்து, தரமுயர்த்துவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

எனக்கு எதிராக மகிந்த வாக்களிக்கமாட்டார் – சரத் பொன்சேகா

நாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணியினர் தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்தால், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிச்சயமாக அதற்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டார் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 13 மனுக்கள்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு எதிராக, சிறிலங்கா உச்ச நீதிமன்றத்தில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

திருகோணமலை துறைமுக அபிவிருத்தி – சிறிலங்கா, இந்தியாவுடன் ஜப்பான் பேச்சு

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சிறிலங்காவுடனும் இந்தியாவுடனும் ஜப்பான் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகனுமா தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்டவரைவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு – கூட்டமைப்பு திடீர் முடிவு

மாகாணசபைகளின் அதிகாரங்களின் மீது நாடாளுமன்றத்தின் மூலம் மத்திய அரசாங்கம் கைவைப்பதற்கு, வழி செய்யும் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது.

கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்யும் அனைத்துலக பிரகடனத்தில் கையெழுத்திட சிறிலங்கா இணக்கம்

கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்யும் அனைத்துலக பிரகடனத்தில் சிறிலங்கா இணைந்து கொள்ளும் என்று, ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சிறிலங்காவின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக, கூட்டு எதிரணி அறிவித்துள்ளது.

வருண ரோந்துக் கப்பலை சிறிலங்காவுக்கு வழங்கியது இந்தியா

இந்திய கடலோரக் காவல்படை நேற்று வருண என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலை சிறிலங்கா கடலோரக் காவல்படையிடம் அதிகாரபூர்வமாக கையளித்தது.

அமெரிக்காவின் பசுபிக் கட்டளை தளபதியுடன் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன சந்திப்பு

சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, அமெரிக்காவின் பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் ஹரி பி ஹரிசை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.