மேலும்

மாதம்: September 2017

அடுத்தமாதம் சிறிலங்கா வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீளநிகழாமையை உறுதிப்படுத்துவதற்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர், பப்லோ டி கிரெய்ப் அடுத்தமாதம் சிறிலங்காவுக்கு மீண்டும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜனவரி 20க்குப் பின்னரே உள்ளூராட்சித் தேர்தல் – மகிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சித் தேர்தல் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் நாளுக்குப் பின்னரே நடத்தப்படக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக சிறிலங்காவின் தேர்தல்கள்ஆணைக்குழு  தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரி்வித்தார்.

நீர்க்காகம் கூட்டுப் பயிற்சியை நேரில் பார்வையிடுகிறார் சிறிலங்கா அதிபர்

கடற்படை, விமானப்படையுடன் இணைந்து சிறிலங்கா இராணுவம் நடத்தும், ‘நீர்க்காகம் பயிற்சி- VIII – 2017’ கூட்டுப் போர்ப் பயிற்சியை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை நேரில் பார்வையிடவுள்ளார்.

வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் நேற்று திடீர் தேடுதல்

வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் நேற்றுப் பிற்பகல் 1 மணி தொடக்கம்  3 மணி வரை திடீர் தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அணுகுண்டு சோதனை நடத்திய வடகொரியாவுக்கு சிறிலங்கா கண்டனம்

ஆறாவது அணுகுண்டுப் பரிசோதனையை கடந்த  செப்ரெம்பர் 3ஆம் நாள் நடத்தியுள்ள வடகொரியாவுக்கு, சிறிலங்கா கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. 

பிரதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் அருந்திக பெர்னான்டோ

சுற்றுலா ஊக்குவிப்பு மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் அருந்திக பெர்னான்டோவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பதவிநீக்கம் செய்துள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு சப்ரகமுவ மாகாணசபையும் ஆதரவு

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு, சப்ரகமுவ மாகாணசபையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

வடகொரிய விவகாரம் – சிறிலங்கா அதிபருக்கு ஐ.நாவில் சிக்கல்

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வடகொரியா தொடர்பான ஐ.நாவின் கடுமையான கேள்விகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் மக்களை சிறிலங்கா அரசு நம்பவில்லை – விக்னேஸ்வரன்

வடக்கில் இராணுவத் தளங்களை மூடுவதற்கு மறுப்பதானது, தமிழ் மக்களை சிறிலங்கா அரசாங்கம் நம்பவில்லை என்பதையே அர்த்தப்படுத்துகிறது  என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வெலிக்கடைப் படுகொலைகள் – கோத்தா, ஜெனரல் ஜெயசூரியவிடம் நாளை விசாரணை

வெலிக்கடைச் சிறைச்சாலையில் 27 கைதிகள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாய ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய உள்ளிட்ட உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.