மேலும்

நாள்: 7th September 2017

அதிபர் ஆணைக்குழுவுக்கு முடிவு கட்டுகிறார் மைத்திரி

ஊழல்கள், மோசடிகள், மற்றும் அதிகாரம், அரசாங்க வளங்கள் முன்னுரிமைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட மோசமான செயற்பாடுகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்படாததால் அதன் செயற்பாடுகள் முடிவுக்கு வரவுள்ளன.

20 ஆவது திருத்தச் சட்டவரைவை வடக்கு மாகாணசபை நிராகரிப்பு

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை வடக்கு மாகாணசபை இன்று நிராகரித்துள்ளது. இன்று நடந்த வடக்கு மாகாணசபையின் அமர்வில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.

மகிந்தவின் ‘மூவரணி’யில் ஒருவரான லலித் வீரதுங்கவுக்கு 3 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை

சிறிலங்காவின் முன்னாள் அதிபரின் செயலர் லலித் வீரதுங்க மற்றும்  தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் 3 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இனிமேலும் அமைதியாக இருக்கமாட்டேன் – கோத்தா எச்சரிக்கை

நாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் போது நான் தொடர்ந்தும் அமைதியாக இருக்கமாட்டேன் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல – நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய தொடர்பாக, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டது, அவரது தனிப்பட்ட கருத்தே என்றும், அது அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல என்றும், நாடாளுமன்றத்தில் அவை முதல்வரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல அறிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவில் திருத்தம் செய்யப்படும் – சட்டமா அதிபர்

சிறிலங்கா அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள, 20 ஆவது திருத்தச்சட்ட வரைவில், திருத்தங்கள் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

“சரத் பொன்சேகா ஒரு பைத்தியக்காரன்” – நாடாளுமன்றில் வீரவன்ச ஆவேசம்

அமைச்சர் சரத் பொன்சேகா ஒரு பைத்தியம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

ஆட்கடத்தலை தடுக்கும் புரிந்துணர்வு உடன்பாட்டில் சிறிலங்கா- அவுஸ்ரேலியா கைச்சாத்து

ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையிலான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில், அவுஸ்ரேலியாவும் சிறிலங்காவும் கையெழுத்திட்டுள்ளன.