மேலும்

நாள்: 16th September 2017

மகிந்தவுக்கு எதிராக மைத்திரியைத் திருப்பிவிட்டவர் பசில் ராஜபக்ச – போட்டு உடைத்தார் சதுரிக்கா

மகிந்த ராஜபக்சவிற்கும், தனது தந்தையான மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இருந்த நெருங்கிய நட்புறவை, சீர்குலைத்தது பசில் ராஜபக்சவே என்று,  மைத்திரிபால சிறிசேனவின் புதல்வியான சதுரிக்கா சிறிசேன தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்ட சட்டவரைவுக்கு ஆப்பு வைத்தது உச்சநீதிமன்றம்?

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முன்னர், அதுகுறித்த மக்களின் கருத்தை அறியும் பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கின் மீது மீண்டும் குறிவைக்கிறது பசில்- சந்திரசிறி கூட்டணி

போருக்குப் பிந்திய காலகட்டத்தில் வடக்கில் சர்வாதிகார ஆட்சி நடத்திய பசில் ராஜபக்ச – மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி அணி, மீண்டும் வடக்கை இலக்கு வைக்கத் தொடங்கியுள்ளது.

ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்சபையின் 72 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை நியூயோர்க்கிற்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

இந்தியா வழங்கிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல் கொழும்பு வந்தது

இந்திய அரசாங்கத்தினால் சிறிலங்கா கடற்படைக்கு வழங்கப்பட்ட, ஆழ்கடல் ரோந்துக் கப்பல், இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

ஒரே நாளில் 1.5 மில்லியன் ரூபா – லலித்தை மீட்க பிக்குகள் வீதி வீதியாக நிதி சேகரிப்பு

கொழும்பு நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, முன்னாள் சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்காக பௌத்த பிக்குகளின் மூலம், கூட்டு எதிரணி நிதி சேகரித்து வருகிறது.

அரசியலுக்குள் நுழையும் எண்ணமில்லை – சதுரிக்கா சிறிசேன

கட்சி அரசியலுக்குள் பிரவேசிக்கும் எண்ணம் தனக்கு கிடையாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் புதல்வி சதுரிக்கா சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் கனடியத் தமிழர் கொலை – மூவருக்கு கடும் தண்டனைகள் அறிவிப்பு

பிரித்தானியாவில் தமிழ் இளைஞர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில், ஈழத் தமிழர்கள் உள்ளிட்டவர்களுக்கு கடும் தண்டனைகளை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தியாகதீபம் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின், 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று ஆரம்பமாகின.

அறுகம்குடாவில் முதலை இழுத்துச் சென்ற பிரித்தானிய ஊடகவியலாளரின் சடலம் மீட்பு

அறுகம்குடாவில் நேற்று முன்தினம் முதலை இழுத்துச் சென்ற பிரித்தானிய ஊடகவியலாளரின் சடலம் நேற்று சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டது.