மேலும்

நாள்: 4th September 2017

திருத்தப்பட்ட பின்னர் 20 ஆவது திருத்தம் குறித்து முடிவு – வட மாகாணசபை தீர்மானம்

20 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவு தொடர்பாக அதில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்ட பின்னர், முடிவெடுப்பது என்று வடக்கு மாகாணசபை இன்று தீர்மானித்துள்ளது.

போர்க்குற்ற ஆதாரங்களை சரத் பொன்சேகா நீதிமன்றில் வெளியிட வேண்டும் – இரா.சம்பந்தன்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய இறுதிப் போரில் குற்றங்களை இழைத்தார் என்று குற்றம்சாட்டியுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வருண என்ற ரோந்துக் கப்பலை சிறிலங்காவிடம் நாளை கையளிக்கிறது இந்தியா

இந்தியக் கடலோரக் காவல்படையின் ஐசிஜிஎஸ் வருண என்ற ரோந்துக் கப்பல், சிறிலங்கா கடலோரக் காவல்படையிடம் கையளிக்கப்படவுள்ளது.

சிறிலங்கா அதிபருடன் பேசவுள்ளாராம் ஜெனரல் ஜயசூரிய

தனக்கு எதிராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுமத்தியுள்ள போர்க்குற்றச்சாட்டு தொடர்பாக, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

நீர்க்காகம் போர்ப் பயிற்சி தொடங்கியது – 69 வெளிநாட்டு படையினரும் பங்கேற்பு

சிறிலங்கா இராணுவம் நடத்தும் ‘நீர்க்காகம் பயிற்சி- VIII – 2017’  மின்னேரியாவில் உள்ள காலாட்படைப் பயிற்சி மையத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அனைத்துலக தடைகளில் இருந்து நாட்டைப் பாதுகாத்தது கூட்டு அரசாங்கமே – சிறிலங்கா அதிபர்

ஐக்கிய தேசியக் கட்சி- சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூட்டு அரசாங்கமே, அனைத்துலக தடைகளில் இருந்து நாட்டைக் காப்பாற்றியது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக இராணுவத்தை மாட்டிவிடக் கூடாது – சிறிலங்கா இராணுவத் தளபதி

சிறிலங்கா இராணுவத்துக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் தளபதிகள் தமக்கிடையிலான தனிப்பட்ட பிரச்சினைகளைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

டிசெம்பரில் உள்ளூராட்சித் தேர்தல் நடத்த பரீட்சை ஆணையாளர் எதிர்ப்பு

வரும் டிசெம்பர் மாதத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தினால், கபொத சாதாரண தரப் பரீட்சைகள் பாதிக்கப்படும் என்று சிறிலங்காவின் பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

பொன்சேகாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் – வீரவன்ச போர்க்கொடி

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்திய, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

மூத்த ஊடகவியலாளர் பரமேஸ்வரன் மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்த மூத்த ஊடகவியலாளர் ந.பரமேஸ்வரன், தாக்கப்பட்டுள்ளார்.