மேலும்

நாள்: 2nd September 2017

மகிந்தவின் அரசியல், இந்தியாவுடனான கூட்டமைப்பின் உறவு குறித்து அமெரிக்கா கரிசனை

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் அரசியல் செயற்பாடுகள் மற்றும் இந்தியாவுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறவுகள் தொடர்பாக அறிந்து கொள்வதில், அமெரிக்கா ஆர்வத்தை வெளிப்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

பலாலி விமான நிலைய விரிவாக்கம் – இந்தியாவின் சாத்திய அறிக்கை சிறிலங்கா அரசிடம் கையளிப்பு

பலாலி விமானப்படைத் தளத்தை, பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. பிரதானமாக, இந்தியாவுக்கான விமானப் பயணங்களை மேற்கொள்ளும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

சம்பந்தனைப் பாராட்டிய அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்

பிரதான கொள்கையில் நீங்கள் உறுதியாக இருக்கின்றீர்கள்  என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ்,  பாராட்டியுள்ளார்.

பல்கேரியாவுக்கு 10 மில்லியன் டொலருக்கு ஆயுத தளபாடங்களை விற்கிறது சிறிலங்கா

பல்கேரியாவுக்கு 10 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களை விற்பனை செய்யும் உடன்பாடு ஒன்றில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கையெழுத்திட்டுள்ளது.

டிசெம்பருக்குள் புதிய அரசியலமைப்பு – இந்தியா, அமெரிக்காவிடம் சிறிலங்கா அதிபர் வாக்குறுதி

இந்த ஆண்டு இறுதிக்குள், புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்காவிடமும், இந்தியாவிடமும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகா வழங்கிய ஆவணத்தை வைத்து மிரட்டுகிறார் ஜெனரல் ஜயசூரிய

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுமத்திய போர்க்குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, போர் நடவடிக்கைகளில் தனக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் – சம்பந்தனிடம் சுஷ்மா வாக்குறுதி

புதிய அரசியலமைப்பை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா தேவையான அழுத்தங்களை கொடுக்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்துள்ளார்.

அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையில் முதலாவது கூட்டுப் பயிற்சி திருகோணமலையில்

அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையில் முதலாவது, கடற்படைப் பயிற்சி வரும் ஒக்ரோபர் மாதம் திருகோணமலையில் இடம்பெறவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

நாம் எமது உரிமைகளை இழந்து விட்டோம் – அமெரிக்க பதில் உதவிச்செயலரிடம் சம்பந்தன்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் நேற்றுக்காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இலத்தீன் அமெரிக்காவில் தன் மீதும் கோத்தா மீதும் விசாரணை நடத்தப்படும் என்கிறார் மகிந்த

தன் மீதும், தனது சகோதரரான கோத்தாபய ராஜபக்ச மீதும் கூட இலத்தீன் அமெரிக்க நாடுகளில் போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.