மேலும்

நாள்: 10th September 2017

மகிந்தவைக் காரணம் காட்டி நழுவுகிறது சிறிலங்கா அரசு – முதலமைச்சர் விக்கி குற்றச்சாட்டு

மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வந்து விடுவார் என்ற அச்சத்தினால், தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைத் தவிர்த்து வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மத்தல, கொழும்பு துறைமுக திட்டங்களை விரைவுபடுத்துமாறு சிறிலங்காவுக்கு இந்தியா அழுத்தம்

மத்தல விமான நிலைய திட்டம் மற்றும் கொழும்புத் துறைமுக கொள்கலன் முனைய திட்டம் போன்ற இருதரப்பு  திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்துமாறு, சிறிலங்காவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்மக்கள் அதிகாரப் பகிர்வையோ, தனிநாட்டையோ கோரவில்லையாம் – கமல் குணரத்ன கூறுகிறார்

வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள், தனிநாட்டையோ, காவல்துறை அதிகாரங்களையோ, நீதித்துறை அதிகாரங்களையோ, அதிகாரப் பகிர்வையோ கோரவில்லை என்று, போர்க்குற்றம்சாட்டப்படும் சிறிலங்கா இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இராணுவத் தேவைக்குப் பயன்படுத்தக் கூடாது – இந்தியாவுக்கு சிறிலங்கா நிபந்தனை

மத்தல விமான நிலையத்தை இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற முக்கியமான நிபந்தனையை இந்தியாவிடம் சிறிலங்கா முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா அதிபரின் சகோதரர் சிறையில் அடைப்பு

பொலன்னறுவவில்  விபத்து ஒன்றை ஏற்படுத்தி, இரண்டு பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் லால் சிறிசேன, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அம்பாந்தோட்டைக்கு வந்த சீன குழுவினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – கடற்படை பலத்த பாதுகாப்பு

அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், சீன குழுவொன்று நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளது.

சிறிலங்காவுடன் உறவுகளை பலப்படுத்த இந்தியப் பிரதமர் விருப்பம் – மாரப்பனவிடம் எடுத்துரைப்பு

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நேற்று பிற்பகல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

“நான் இனவாதியல்ல” – மல்வத்த மகாநாயக்கரிடம் முதலமைச்சர் விக்கி எடுத்துரைப்பு

மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரரை நேற்றுச் சந்தித்துப் பேச்சு நடத்திய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.