மேலும்

நாள்: 5th September 2017

பிரேசிலை விட்டு வெளியேற்றப்பட்டாரா ஜெனரல் ஜயசூரிய? – சந்தேகம் கிளப்பும் தூதுவர்

பிரேசிலில் சிறிலங்கா தூதுவராகப் பணியாற்றிய ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து கொழும்பு திரும்பிய சூழல் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களை முன்னிறுத்தி, த ஐலன்ட் நாளிதழில், சிறிலங்காவின் முன்னாள் தூதுவராக பணியாற்றிய பந்து டி சில்வா எழுதியுள்ள குறிப்பு-

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா -படங்கள்

ஈழத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றான தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ இடம்பெற்றது.

தவறு செய்தவர்களை பாதுகாப்பது நியாயமற்றது – அரச தலைவர்களுக்கு சரத் பொன்சேகா பதிலடி

இராணுவ சீருடையில் போர்வீரர்கள் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு தவறு செய்தவர்களை பாதுகாக்க முற்படுவது நியாயமற்றது என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும், அரசாங்கத்தில் உள்ள தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவின் அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவிடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்டத்தை பறிக்க வேண்டும் – வாசுதேவ நாணயக்கார

சரத் பொன்சேகாவிடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்டத்தை பறித்து. அமைச்சரவையை விட்டு அவரை வெளியேற்ற வேண்டும் என்று கூட்டு எதிரணி வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா இராணுவத் தளபதியைப் பாராட்டுகிறார் மகிந்த

சிறிலங்கா இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவை நாட்டு மக்கள் பாராட்ட வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனவரியிலேயே உள்ளூராட்சித் தேர்தல்

உள்ளூராட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு ஒக்ரோபர் மாதம் வெளியிடப்பட்டு, ஜனவரி மாத இறுதியில் தேர்தல்கள் நடத்தப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கூட்டுப் பயிற்சிக்காக சிறிலங்கா போர்க்கப்பல்கள் விசாகப்பட்டினம் விரைவு

இந்தியக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக, சிறிலங்கா கடற்படையின் இரண்டு பாரிய போர்க்கப்பல்கள், நேற்று விசாகப்பட்டினத்தக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளன.