மேலும்

நாள்: 18th September 2017

போரில் தவறு செய்யாத படையினர் தண்டனைக்கு அஞ்ச வேண்டியதில்லை – சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்ட படையினர் எவரும், தாம் குற்றங்கள் எதையும் செய்யாவிடின் எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை என்று சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நியூயோர்க் சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அமெரிக்காவைச் சென்றடைந்தார்.

மியான்மாரில் இருந்து வந்த பிக்குகளுக்கு கட்டுநாயக்கவில் நுழைவிசைவு மறுப்பு

மியான்மாரில் இருந்து சிறிலங்கா வந்த பௌத்த பிக்குகளின் குழு ஒன்றுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் நுழைவிசைவு மறுக்கப்பட்டுள்ளது.

2009இல் ஜெனிவாவில் சிறிலங்கா வெற்றி பெற்றது எப்படி? – வெளிவராத தகவல்களைக் கூறும் நூல்

நான்காம் கட்ட ஈழப்போர் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த பின்னர், முதற் தடவையாக மே 27, 2009ல் ஜெனிவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா பெற்றுக்கொண்ட இராஜதந்திர வெற்றி தொடர்பாக சன்ஜ டீ சில்வா ஜயதிலக எழுதிய “Mission Impossible: Geneva” என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.நா அணுஆயுத தடை உடன்பாட்டில் கையெழுத்திட சிறிலங்கா மறுப்பு – அமெரிக்காவே காரணம்

ஐ.நாவின் அணுஆயுத தடை உடன்பாட்டில், சிறிலங்கா கையெழுத்திடுவதற்கு வாய்ப்பில்லை என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவைக் கைவிடுகிறது சிறிலங்கா அரசு – டிசெம்பரில் தேர்தல்?

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 வது திருத்தச்சட்ட வரைவு மீது வரும் 19ஆம் நாள் நடத்தப்படவிருந்த விவாதம் காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக, மூத்த அமைச்சர்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவு – திட்டமிட்டபடி விவாதம் நடக்குமாம்

மாகாணசபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டவரைவு,  திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தில் வரும் 20ஆம் நாள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை கழற்றி விட்டு ஐ.நா சென்ற மைத்திரி

அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்று அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நாவில் சிறிலங்கா அதிபரின் உரைக்கு எதிராக போராட்டம் நடத்த ஏற்பாடு

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் 72 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை உரையாற்றவுள்ள நிலையில், அவருக்கு எதிரான போராட்டம் ஒன்றை நடத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.