மேலும்

நாள்: 19th September 2017

சிறிலங்கா குறித்த வர்த்தகக் கொள்கையில் மாற்றம் இருக்காது – அமெரிக்கா

அமெரிக்காவின் புதிய அரசாங்கத்தில், சிறிலங்கா தொடர்பான வர்த்தகக் கொள்கையில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி வர்த்தகப் பிரதிநிதி மார்க் லின்ஸ்கொட் தெரிவித்துள்ளார்.

சியோலில் நடக்கும் பசுபிக் இராணுவத் தளபதிகள் மாநாட்டில் சிறிலங்கா இராணுவத் தளபதியும் பங்கேற்பு

தென்கொரியாவின் சியோல் நகரில் நடைபெறும் இந்தோ- ஆசிய- பசுபிக் பிராந்திய இராணுவத் தளபதிகளின் மாநாட்டில் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தலைமையிலான உயர்மட்டக் குழு  பங்கேற்றுள்ளது.

வெள்ளியன்று ஐ.நா மனித உரிமை ஆணையாளரைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுடன், வரும் வெள்ளிக்கிழமை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்- சிறிலங்கா உச்சநீதிமன்றம்

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு தொடர்பான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஐ.நா செல்வதற்கு சரத் பொன்சேகாவுக்கு நுழைவிசைவு மறுத்தது அமெரிக்கா

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் குழுவில் சேர்க்கப்பட்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, அமெரிக்கா நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்ட வழக்குகள் விரைவில் முடிவுக்கு வரும் – சட்டமா அதிபர் உறுதிமொழி

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான வழக்குகளை துரிதப்படுத்துவதற்கு, சட்டமபா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என்று சிறிலங்கா அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கும் அனைத்துலக பிரகடனம் – பின்வாங்கியது அரசு

பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் அனைத்துலக பிரகடனம் தொடர்பான விவாதம் வரும் 21ஆம் நாள் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

20 ஆவது வரைவைக் கைவிட்டது சிறிலங்கா அரசு – நாளை மற்றொரு திருத்தத்தை முன்வைக்கிறது

20 ஆவது திருத்தச்சட்ட வரைவு தொடர்பான விவாதம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நாளை இடம்பெறாது என்றும், எனினும், நாளைய அமர்வில் மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டவரைவை ஐதேக முன்வைக்கவுள்ளதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலுக்கு வருவாரா சந்திரிகாவின் மகன் விமுக்தி?

தனது மகன் விமுக்தி குமாரதுங்கவை அரசியலுக்கு கொண்டு வரும் நோக்கம் தனக்குக் கிடையாது என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.