மேலும்

நாள்: 22nd September 2017

ஐ.நா உதவிச் செயலருடன் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் சந்திப்பு

அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு உதவுவதற்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்னான்டஸ் தரன்கோவுடன் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசம் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

செப்ரெம்பர் 26 முதல் மூன்று மாகாணசபைகளும் ஆளுனர்களின் கையில் – மார்ச்சில் தான் தேர்தல்

கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாணசபைகள், செப்ரெம்பர் 26ஆம் நாளுக்குப் பின்னர் ஆளுனர்களின் கட்டுப்பாட்டில் வரும் என்று இங்கு மார்ச் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்படும் என்றும் சிறிலங்காவின் உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை – முக்கிய அம்சங்கள்

புதிய அரசியலமைப்பு உருவாக்குவ தற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று அரசியலமைப்பு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த இடைக்கால அறிக்கை பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

போர்குற்றச்சாட்டுகளில் இருந்து இராணுவத்தினரைப் பாதுகாப்போம் – திலக் மாரப்பன உறுதி

ஜெனரல் ஜெகத் ஜயசூரிய போர்க்குற்றங்களில் ஈடுபட்டார் என்று அண்மையில் பிரேசிலில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு நிரூபிக்கக் கூடிய ஆதாரங்கள் இல்லை என்று சிறிலங்காவில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரை இன்று சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.

இடைக்கால அறிக்கை குறித்த நிலைப்பாட்டை விவாதத்தின் போது அறிவிப்போம் – சம்பந்தன்

அரசியலமைப்பு திருத்தத்துக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு, அரசியலமைப்பு சபையில் விவாதிக்கப்படும் போது வெளிப்படுத்தப்படும் என்றும், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலருடன் சிறிலங்கா அதிபர் சந்திப்பு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் தோமஸ் சானோனை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.