மேலும்

வடக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

npc-ministersவடக்கு மாகாணசபையின் புதிய அமைச்சர்களாக மருத்துவ கலாநிதி ஜி.குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோர் இன்று பிற்பகல் பதவியேற்றனர்.

ஆளுனர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயின் முன்பாக, புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

சுகாதார அமைச்சராக, மருத்துவ கலாநிதி ஜி.குணசீலனும்,  விவசாய, கால்நடை அபிவிருத்தி அமைச்சராக, சிவநேசனும் பதவிகளை ஏற்றுக் கொண்டனர்.

அதேவேளை, டெனீஸ்வரனிடம் இருந்த போக்குவரத்து அமைச்சை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

npc-ministers

டெனீஸ்வரனிடம் இருந்த ஏனைய அமைச்சுப் பொறுப்புகள் அனந்தி சசிதரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதனால் இவர்கள் நால்வரும், இன்று ஆளுனர் முன்பாக, தமது பதவிகளை பொறுப்பேற்றனர்.

அதேவேளை, கல்வி அமைச்சராக சர்வேஸ்வரன் ஏற்கனவே தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *